உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம்

18

மடி என்னும் சொல், “என்னை நீ கொண்டால் “மடிந்து விடுவாய்” மட்கி மண்ணாகிப் போவாய்!” “நீ மடி கொள்ளாதே! நிமிர்ந்து நில்! ஏறு நடையிட்டுச் செல்! எடுத்த செயலில் வெல்! என்று ஏவுகின்றது!

மடிந்து கிடக்கும் கதரில் மணி உண்டா? மடித்துப் போன வைக்கோலை மாடு தின்னுமா? மடித்துப் போன அரிசியும் பருப்பும் ஆக்கி உண்ண உதவுமா? மடி கொண்டவன் அவனை அன்றி அவன் குடியையும் கெடுப்பவன்:

குடும்பம் என்பது குத்துவிளக்கு. அக் குத்துவிளக்குத் திரியில் உள்ள கருக்கைத் தட்டாமல் விளக்கேற்ற முடியுமா! அக் கருக்கை அகற்றா விட்டால் சுடர் உண்டாகாதே? அது போல் மடியை ஒழிக்கா விட்டால் குடிநலம் உயராது! இதனையே குடிஎன்னும் குன்றா விளக்கம் மடி என்னும் மாசூர மாய்ந்து கெடும்’”

என்கிறது வள்ளுவர் வாய்மொழி

நீருள் மூழ்கியவன் வெளியேற என்ன துடிப்புத்துடிக்கிறான்? புகை மூட்டத்துள் பட்டவன் வெளியேற என்ன பாடுபடுகிறான்? அந்த முயற்சி - அந்தத் துணிவு - அந்த விரைவு உழைப்பில் உண்டானால் உயர்வு, தானே தேடி வந்து ஓடிவந்து சேரத்தானே செய்யும்?

ஓரிடத்தில்குத்துச் சண்டைஒன்று நடந்தது. அச்சண்டையில் ஈடுபட்டவர்கள் இருவரும் உலகப் புகழாளர்கள். அவர்களுள் வெற்றி பெற்றவர் எவரோ அவர் உலகக் குத்துச் சண்டை வீரருள் முதலாமவர். தோற்றவர் உலகக் குத்துச் சண்டை வீரருள் இரண்டாமவர். அவர்களின் எழுச்சி மிக்க தாக்குதலைப் பதினைந்தே வயதான ஒரு இளைஞன் கண்ணிமையால் பார்க்கின்றான். 'சும்மா' பார்க்கிறேன் என்று இல்லாமல் "சுடர்விடும்’ பார்வையால் பார்க்கிறான்!

.

“யான் ன் இவர்களைப் போலக் குத்துச் சண்டை வீரன் ஆவதற்கு இன்றே இன்றே என் முயற்சியைத் தொடங்குவேன். இப்பொழுது வெற்றி பெறும் உலகக் குத்துச் சண்டை வீரனை, ஒருநாள் நான் வெற்றி பெறுவேன்” என உறுதி கொண்டான்.