உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

L

59

உறுதியைச் சொல்லளவில் விட்டான் அல்லன் அந்த இளைஞன் அப்பொழுதே அம்முயற்சியில் இறங்கி விட்டான். குத்திப் பயிற்சி செய்வதற்கு ஒரு பை உண்டு. அப்பையின் இரண்டு பக்கங்களிலும் குத்துச் சண்டை செய்த வீரர் இருவர் படத்தையும் வரைந்தான். அவர்களொடு மாறி மாறிக் குத்துப் போர் புரிவது போலப் பயிற்சி செய்தான்; வெற்றி பெற்றவன் விம் சிதையச் சிதையக் குத்தித் தீர்த்தான். ஓராண்டு இரண்டாண்டு இல்லை ஒன்பதாம் ஆண்டில் அவன் சொல்லிய சொல்லை உறுதி செய்தான். உலகக் குத்துச் சண்டை வீரருள் முதல்வனை வென்ற முதல்வன் ஆனான்; அவன் பெயர் சக்டெம்சே’ என்பது; இந் நிகழ்ச்சி அமெரிக்க நாட்டில் நிகழ்ந்தது. ஆண்டு 1919 ஆகும்.

தெற்று வாயரான 'டெமாசு தனீசு’ எப்படி அக்குறையை வென்றார். மலைப் பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் நீர் நிலைகளிலும் அவர் செய்த பயிற்சிகள் இவ்வளவு அவ்வளவா? அப் பயிற்சிதானே அவரைச் சொல்லின் செல்வர் ஆக்கிற்று! செலச் சொல்வாராய் வெலச் சொல்வாராய் விளங்கச் செய்தது!

-

எடுத்துக் கொண்ட முதல் வழக்கில் வாதாடுவதற்கு வாய்வராது, வாங்கிய தொகையையே வாய்மையால் திருப்பித் தந்த காந்தியடிகள், வாய்ச்சொல் கேட்க, வையகமே வாய்திறந்து நின்றமை உலகறி காட்சி அல்லவா!

உலகத்தை ஆட்டிப் படைக்க வல்லவராகத் திகழ்ந்த சர்ச்சில் பெருமகனார் நாவை ஆட்டுவதற்கு எத்தகைய பயிற்சியை நாளும் நாளும் மேற்கொண்டார். கண்ணாடிக்கு முன்னே நின்று கையை அசைத்து, விரலை ஆட்டி, முகத்தைக் காட்டித் தம் மனம் நிறையும் அளவுக்குப் பயிற்சி செய்த பின்னர்த் தானே மேடை ஏறினார் அவர் பயிற்சித் திறம்தானே அவர்க்கு வெற்றி மேல் வெற்றி குவித்தது

“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் நித்தம், நடையும் நடைப் பழக்கம்” என்னும் பாடலில் வரும் பழக்கம் என்பது உழைப்புப் பயிற்சியேயாகும்.

66

"ஒவ்வொருவரும் அறிஞராகவும் செல்வராகவும் வர வேண்டும் என்றே ஆசைப்படுகின்றனர்.அவ்வாசை அனைவர்க்கும் இயல்பானதே, ஆனால் அவற்றை உடைவதற்காக எடுத்துக்