உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ்வளம்

18

கொண்ட முயற்சி என்ன? உழைப்பு என்ன? ஊக்கம் என்ன? முயற்சி, உழைப்பு, ஊக்ம் இல்லாமல் எப்படி அறிவும் செல்வமும் தானே வந்து குவிந்துவிடும்?” என்று வினாவுகிறார் உலகப் பெருஞ் செல்வருள் ஒருவராகிய இராக் பெல்லர்

மறைமலையடிகள் என்பவரைத் தமிழறிந்தோர் நன்கு அறிவர். அவர், தம் தந்தையாரை இளமையிலேயே இழந்தவர். தாயார் உதவியால் ஒன்பதாம் வகுப்பு வரையே படித்தவர், குடும்ப நிலைமையைக் கருதி, மேலே பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே கற்றவர். அவர் கற்ற கல்வியை அவரே எழுதுகின்றார்.

“எமது பதினைந்தாம் ஆண்டில் முறைப்படி துவங்கிய தமிழ்ப்பயிற்சியானது எமது இருபத்தோராம் ஆண்டிற்குள் தொல்காப்பியம், திருக்குறள், சிற்றம்பலக் கோவையார் என்னும் மூன்று நூல்களையும் முழுதும் நெட்டுருச் செய்து முடித்தோம்.

கலித்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், நாலடி முதலிய நூல்களிற் பெரும் பகுதிகள் அங்ஙனமே நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டன.

சிவஞான போதம்.சிவஞான சித்தியார் என்னும் நூல்கள் இரண்டும் முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப்பட்டன.

இவையேயன்றி நன்னூல் விருத்தி இறையனார் அகப் பொருள் தண்டியலங்காரம் முதலான நூல்களும் முன்னமே முழுமையும் நெட்டுருச் செய்து முடிக்கப் பட்டனவாகும்.

கல்லாடம், சீவகசிந்தாமணி, பெரிய புராணம் என்னும் நூல்களின் சொற்சுவை பொருட்சுவைகளில் பெரிதும் மூழ்கி யிருந்தும் அவற்றில் இருந்து எடுத்துப் பாடஞ் செய்த செய்யுட்கள் மிகுதியாய் இல்லை, என்றாலும் அவற்றின் சொற்பொருள் நயங்கள் எமதுள்ளத்தில் வேரூன்றி நின்றன. இங்ஙனமாக விழுமிய தமிழ் நூல்களில் எனது கருத்து ஈர்ப்புண்டு நின்று பயின்ற பயிற்சியினாலேயே செய்யுளும் உரையும் தனிச் செந்தமிழ் நடையில் எழுதும் திறம் எமது இளமைப்பருவத்திலேயே எமக்கு வாய்ப்ப தாயிற்று” என்கிறார்.

தாமே சுற்றுப் பெரும் புலமையராகத் திகழ்ந்த மறைமலையடிகள் தமிழைப் போலவே ஆங்கிலம் வடமொழி ஆகிய மொழிகளிலும் தேர்ந்து விளங்கினார். அவர் படித்த