உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

61

படிப்புத்தான் எத்தகையது? 'பட்டினப்பாலை 301 அடிகளையுடைய நூல். இவற்றுள் வஞ்சியடி 163, அகவலடி 138, இவ்வடிகளில் அமைந்த சொற்கள் 1369. இவற்றுள் வடசொல் 12. திசைச் சொல் 1. ஆகப் பிற சொல் 13. ஆதலால் நூற்றுக்கு ஒரு சொல் பிற மொழிச் சொல்” எனக் கணக்கிட்டு டு உரைத்த கடிய

உழைப்பாளர் அவர்.

மதுரைப் பல்கலைக் கழகத், துணைவேந்தராகத் திகழ்ந்தவர் அறிஞர் மு.வரதராசனார் அவர் முதற்கண். பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவராகவா இருந்தார். உயர்பள்ளிக் கல்வி அளவில் நின்று ஓர் அலுவலக எழுத்தராகத் தானே வாழ்வைத் தொடங்கினார். பின்னே இடைநிலை ஆசிரியராய், தமிழாசிரியராய், கல்லூரிப் பேராசிரியராய், தமிழ்த்துறைத் தலைவராய், துணை வேந்தராய்க் கல்வியில் சிறந்தும் பதவியில் ஓங்கியும் உயர்ந்தமை உழைப்பின் கொடையல்லவோ!

அதே மதுரைப் பல்கலைக் கழகத்தின் இன்னொரு துணைவேந்தர் வ.சுப.மாணிக்கனார்.

சிறிய வயதில் பர்மாவில் வட்டிக் கடையில் பெட்டியடிப் பையனாக அல்லவோ தொழில் வாழ்வைத் தொடங்கினார். கடைக்கு உரியவர் கடைக்குள் இருந்து கொண்டு, தாம் இல்லை என்று சொல்லுமாறு மாணிக்கரிடம் சொல்ல, பொய் சொல்ல மாட்டேன் என்ற அந்த வாய்மையால் வேலையை இழந்து தாய் மண்ணு க்கு வந்து, மகிபாலன் பட்டியில் வாழ்ந்த பண்டிதமணி கதிரேசனாரிடம் தனியே தமிழ்க் கல்வி கற்று, அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவியால் புலமை எய்தித் தமிழாசிரியராய், தமிழ்ப் பேராசிரியராய், தமிழ்த்துறைத் தலைவராய், துணை வேந்தராய்த் தோன்றிற் புகழொடு தோன்றுக என்பதற்கு லக்கியமாகித் தொட்ட துறைகளையெல்லாம் துலங்கச் செய்தவர் ஆனார்!

இவர்கள் உயர்வுக்கு மூலப்பொருள், உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்பது தானே.

இதோ ஒரு செல்வர்! தொழில் நிலைச் சூழலால் உள்ள பொருளையெல்லாம் இழந்துவிட்டார். ஆனால் உள்ளதை எல்லாம் இழந்தாலும் உள்ளத்தை மட்டும் இழவாத உறுதியாளராகத் திகழ்ந்தார்! தொழில் போனாலும் தாம் பெற்ற தொழில் திறமை போய்விடவில்லை அல்லவா! புதுப் பிறவி