உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

18 இளங்குமரனார் தமிழ்வளம்

எடுத்தவர் போலச் சிலிர்த்துச் செம்மாந்து செயலாற்றினார்! லைச் செல்வர் ஆனார்! ஆலை ஒன்று, பல ஆலைகளை ஈட்டித் தந்தது! பலப்பல. மதுரை மீனாட்சி ஆலை! அவ்வுழைப்பின் உரவோர் அமரர் கருமுத்து தியாகராசர்.

இதோ ஓர் இளைஞர் ஒரு சிற்றூரில் வாழ்பவர், அவ்வூர்க்கு ஒரு வெள்ளைக்காரர் குதியுந்தாகிய 'மோட்டார் பைக்கில்' வந்தார். அவரைக் காண்பதற்கு மேலாக அவர் வந்த வண்டியின் மேல் வைத்த கண் மாறாமல் பார்த்தார் இளைஞர். வண்டியை விலைக்கு வாங்குபவன் போல் பார்க்கிறாயே என்றார் ஆங்கிலர். “ஆம் என்ன விலை?” என்றார் இளைஞர் “200 ரூபா” என்று விளையாட்டுப் போல் பேசி விட்டுப் போய் விட்டார். ஆங்கிலர்.

66

இளைஞரிடம் பணமா இருக்கிறது? எப்படியோ முயன்று தொகையைச் சேர்த்தார். அவ்வாங்கிலரைக் கண்டு “தாங்கள் வண்டிக்குச் சொல்லிய தொகை இது” என்று தந்தார். என்ன செய்தார்? வாக்கை மாற்றாமல் வண்டியைத் தந்தார் ஆங்கிலர். இளைஞர் அவ்வண்டியில் ஏறி ஊர்க்கு வந்தார். ஊரே திரண்டு வேடிக்கை பார்த்தது! வந்ததும் வண்டியை உறுப்பு உறுப்பாகக் கழற்றினார். பின்னர்ப் பூட்டினார். அப்படியே மீண்டும் செய்தார். மறுநாள் "இங்கே மோட்டார் பைக் பழுது பார்க்கப்படும் என ஒரு பலகையை மாட்டினார். அவரே தமிழகத்தின் இணையற்ற கண்டு பிடிப்பாளர் தொழில் துறைத் தோன்றல் கோவை கோ. துரைசாமியார் எனப்படும் சி.டி.நாயுடு ஆவர்! அவர் உழைத்த உழைப்பு எவ்வளவு பெரியது. “உழைப்பே உயர்வு" என்பதனை, உயர்ந்தோர் வரலாறுகள்,பட்டயமாய் கல்வெட்டாய்க் காட்டிக் கொண்டே உள்ளன. உழைப்பால் உயர்பவரைத் தடுக்க ஒரு தடை, உலகில் உண்டாகியதும் இல்லை; உண்டாகப் போவதும் இல்லை!

66

99

விழிமின்! எழுமின்!

என்றார் விவேகானந்தர்.

66

“பற! பற! பற! மேலே மேலே மேலே"

என்றார் பாரதியார்

-

‘எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்”

-