உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

பசித்துக் கிடந்து உண்ணக் காத்திருப்பவன் விரும்பி உண்ணும் ணர்வுக்கும், பசியின்றி ‘உண்ண வேண்டுமே' என்பதற்காக உண்பவன் உணர்வுக்கும் எவ்வளவு இடைவெளி!

அக இன்பம், கூடுதலில் இல்லை; கூடுவதை எதிர்பார்த்து இருத்தலிலேயே இருக்கிறது! இத் தெளிவின் தீர்ப்பாகவே முல்லை, குறிஞ்சி என முறை வைத்தனர். நில அமைப்புப் பற்றிக் கூறல் தொல்காப்பியர் நோக்கு இல்லை. ஒழுக்க அமைதிபற்றிக் கூறுதலே அவர் நோக்கு. தொல் காப்பிய உரிப்பொருள் விளக்கமாகவே காமத்துப்பால் இயற்றியவர் திருவள்ளுவர். அவர் இறுதிக் குறளாக,

"ஊடுதல் காமத்திற்கு இன்பம்; அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்

என்றமை விளக்கமாக்கும். இதன் மேல்விளக்கமாக, “உணலினும் உண்டது அறல் இனிது; காமம் புணர்தலின் ஊடல் இனிது”

என்பதும் (1326) எண்ணி மகிழத்தக்கது.

நிலம், பொழுது

வாழும் இடம், காலம், சூழல் ஆகியவைக்கும் வாழ்வார்க்கும் தொடர்பு உண்டா? உண்டு என்பது வெளிப்படை.

மலைவாணர் ஊணும் உடையும் உறைவும் தொழிலும், கட ல் வாணர் ஊணும் உடையும் உறைவும் தொழிலும் ஓர் ஒப்பானவையா?

6

முல்லை ஆயர் தொழிலும் குடிநலம் பேணலும், மருத உழவர் தொழிலும் குடிநலம் பேணலும், ஓர் ஒப்புமை அமைந்தவையா?

பனிநாள் மழைநாள் இளவேனில் நாள் மாறுதல், மக்கள் ஊண் உடை உறை நிலை மாற்றங்களை ஆக்க வில்லையா?

இனிய விடியற் பொழுதும், கொடிய நண்பகல் வேளையும், மஞ்சள் மாலையும், காரிருள் கப்பிய யாமமும் என்னென்ன மாற்றங்களை யெல்லாம் ஏற்படுத்திவிடுகின்றன!

குளிர் தூங்கும் அருவிச் சூழலும், கொதிக்கும் பாலைச் சூழலும் தனித்தனிப் பதிவுகளை உருவாக்கி விட வில்லையா?

இவற்றை எண்ணுவார், வாழ்வுக்கு நிலமும் பொழுதும் சூழலும் உடனாகி நிற்றலை உணரத் தவறார்.

நாடக உயிர்ப்பு, உரையாட்டு நடிப்பு தோற்றம் என்பவற்றில் இருந்தாலும், மேடையும் திரையும் ஒளியும் பிறவும் அவற்றை மேம்படுத்துதல் நாம் அறியாதது இல்லையே!