உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

89

காலையில் பிரிந்து மாலையில் திரும்பும் கடமையுடையராய் ‘ஒருவரை ஒருவர் நினைந்திருத்தலும் இருத்தல்' எனத் தகும்.

"ஓதல் பகையே தூது இவை பிரிவே

யட

என்னும் பிரிவுகள், நெடிய பிரிவுகள் ஆகலின் அவை இல்லத்தின் எல்லை கடந்து,கடற்பரப்பு வரை நீண்டு ‘நெய்தல்' எனப்பட்டது. நெய்தல் ஒழுக்கம்

இரங்கல்.

வெப்பத்தால் வெண்ணெய் உருகும் உருக்கம் போல உருகும் நிலை அது. கடலும் அலையும் கானலும் காற்றும் அமைந்த சூழல் பிரிந்தார்க்குத் துயரைப் பெருக்குதலின் இரங்கல் நெய்தல் ஆயது.

கொஞ்சம் என்பது சிறிது என்னும் பொருளது. சிறிதளவும் சிறிது நேரமும் கொஞ்சம் எனப்படுதல் வழக்கம். கொஞ்சுதல் என்பது மகிழ்வுப் பொருளும் தரும். “கெஞ்சும் கொஞ்சும்” என்பது திருப்புகழ். கொஞ்சுத லாம் மகிழ்தல், அளவால் குறைந்திருத்தலே நெஞ்ச நிறைவாழ்வு என்பதை வெளிப்படுத்தும். இச் சொல் வழக்கு ஆழமிக்க அகப் பொருள் இலக்கண வழிப்பட்டதாகும்.

கூடியிருத்தலுக்குக் குளிர்கால யாமப் பொழுதை மட்டுமே குறித்து, எஞ்சிய காலமும் பொழுது மெல்லாம் பிரிதலும், பிரிதல் நிமித்தமுமாக அமைத்துக் கொண்ட நலவாழ்வு முறை நானிலம் போற்றத்தக்கதும், கொண்டு ஒழுகத் தக்கதுமாம்.

ஊடல்

னி

இனி ஊடல் என்னும் மருதத்தின் பொருள் தான் என்ன?

உடலுக்கு ஒரு பெயர் ‘கூடு’ என்பது. “கூடு விட்டு இங்கு ஆவிதான் போன பின்பு" என்பதில் வரும் கூடு உடல் இல்லையா? குடம்பை தனித் தொழியப் புள் பறந்தற்றே என்பதில் வரும் குடம்பையும் கூடு தானே!

கூடும் கூடும் (உடலும் உடலும்) ஒன்றுதல் கூட ல். கூடும் கூடும்

கூட ாமல் ஓர் எண்ணம் ஊடு தடுத்திருத்தல் ஊட ல்.

ஆதலால் உடனிருந்தும் பிரிதல் ஊடல் ஆகின்றது. ஆகவே அகவாழ்வில் நம் முந்தையர் கொண்டிருந்த தெளிந்த கருத்தும் அறிவுறுத்தமும் பாராட்டுக்கு உரியவையாம்.

ஊட

இவ் வகையால், உரிப் பொருள் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ல் என முறைப்படுத்தப்பட்டன.

நிமித்தம்

புணர்தல் எனின் வருதல், காணல், உரையாடல், பிரிதல் என்பனவும் நிகழ்வன தாமே. இவை, புணர்தல் நிமித்தம் எனப்பட்டன. இவ்வாறே