உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

பிரிதல் முதலியனவும் நிமித்தம் உடையவையாய்ப் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் என்பவை முதலாகப் பெயரீடு பெற்றன. நிமித்தம் என்பது சார்பாவது.

பெயர்

இனி உரிப் பொருளுக்கு உரியார் எவர்? அவர் பெயர் என்ன? தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்

சோழன் கரிகால் பெருவளத்தான்

கட ல் பிறக் கோட்டிய செங்குட்டுவன்

வல்வில் ஓரி

வையாவிக் கோப் பெரும் பேகன்

பெருங்கோப் பெண்டு

கண்ணகி

இவ்வாறெல்லாம் வருவன பாடுபுகழ் பெற்ற பெயர்கள். இன்னாரை இன்னார் பாடியது என்னும் குறிப்பும் திணையும் துறையும் உடையவை. தொண்டைமானுழைத் தூது சென்ற ஔவையார் பாட்டு, சேரமான் கணைக்கால் இரும் பொறை உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு என்னும் இன்ன வரலாறும் உடை யவை. இப்படிப் பெயர்களோ ஊர்க் குறிப்போ இல்லாத பாடல்கள் அகப் பாடல்கள்.

பாடும் பொருளோ, உள்ளத்தே கொண்டெ உடை யார் இவரெனக்

ழுகும் உணர்வுப் கூறின் என்னாம்;

பொருள். அதனை

புறப்பொருள் ஆகிவிடுமே!

ஆதலால்,

"மக்கள் நுதலிய அகனைந் திணையும்

சுட்டி ஒருவர்ப் பெயர்கொளப் பெறாஅர்

என்பது ஆணை மொழியாயிற்று (1000). அவர் பெயரை எங்கே கூறலாம்? எனின்,

“புறத்திணை மருங்கின் பொருந்துதல் அல்லது

அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே

என்பது வரையறையான விடையாயிற்று (1001).

இவ்வாறு பெயர் கூறல் ஆகாது என்பது மட்டுமில்லை. மறைமுக மாகவோ குறிப்பாகவோ கூட இன்னார் என அறிதற்குரியவை அகப் பாடலில் இடம்பெறல் ஆகாது. அப்படி ஒரு பாட்டுடைத் தலைவன்