உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

ஆயினர். இனி, ஏவுவதைச் செய்தலும் இல்லாராய்ப் பிறரைத் தாம் ஏவித் தம் கடனைத் தட்டிக் கழிப்பாரும் உளர். அத்தகையரும் அன்பின் ஐந்திணையைப் பேணிக் கொள்வார் அல்லர். ஆதலால், இத்தகையர் அகத்திணைத் தலைமைக்கு உரியவர் அல்லர். தள்ளத் தக்கவர் ஆவர் எனப்பட்டனர்.

ஏனெனில் பாடு பொருட் சிறப்புப் போலவே, பாடப்படுவார் சிறப்பும் கருதியதே அகப்பாட்டு.

அகத்திணைக்குத் தக்காராகக் கருதப்படாத இவர் அன்பின் ஐந்திணைகளுக்கு முன்னாம் கைக்கிளைக்கும் பின்னாம் பெருந்திணைக் கும் உரியர் என்று கூறுவதும் உரைமரபாக உள்ளது. இத்தகையர் இன்ப வாழ்வைப் புறத்திணைக்கண் சார்த்திக் காண்பதை அன்றி, அகத் திணைக்கண் சார்த்திக் காணக் கூட ாது எனல் பொருந்துமோ என எண்ண வேண்டியுளது.

66

“அடியோர் பாங்கிலும் வினைவலர் பாங்கிலும்

கடிவரை இலபுறத்து என்மனார் புலவர்”

என்பது நூற்பா (969). கடிவரை இல - நீக்குதல் இல்லை.

இதனை,

"புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது அகத்திணை மருங்கின் அளவுதல் இலவே” என்பதனொடு இணைத்து நோக்கலாம் (1001).

பிரிவார் தகவு

இன்பத்தை மேம்படுத்துவதாகிய பிரிவு எவ்வெவ் வகையால் ஏற்படும், அப் பிரிவிற் குரியவர் தகுதி என்ன என்பதை அடுத்தே குறிப்பிடு கிறார் ஆசிரியர். கற்பியலில் மேல்விளக்கமும் தருகிறார் (1133 - 1137).

பாடு புகழ் பெறுவோர் தக்கோர் ஆதலின், அவர்தம் அறக்கடமை நாட்டுக்கடமை பொருட்கடமை புலப்படும் வகையால், அவர்கள் பிரிவு வகைகள் இவையெனக் கூறுகிறார்.

“ஓதல் பகையே தூதிவை பிரிவே’

என்றும் (971)

“பொருள்வயின் பிரிதலும் அவர்வயின் உரித்தே”

என்றும் (979) வருவன அவை.

ஓதல் பிரிவு என்பது, இளமைக் கல்வி பெறுவாரை அன்று; கற்றுத் துறை வல்லாராய் மேனிலைக் கல்வி பெறச் செல்வாரைக் குறித்தது.