உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

109

நாடுவான். தன் உயிர்த் தோழனாக இருப்பான் துணையையும் கொள்வான். தலைவன் தலைவியர் உறுதிப் பாட்டைப் பெருக்கும் வகையால் தலைவன் தலைவியர் இருவரும் காணத் தடையாகியும், காண வாய்ப்பு உண்டாக்கித் தந்தும் பங்களிப்புச் செய்வர். இரவில் சந்தித்தல், பகலில் சந்தித்தல், சந்திப்புக்கு இடையூறு என்பனவும் நிகழும்.

தோழி, தலைமகள் இளமைப் பருவம் உரைப்பாள்; அவள் அறியாள் என்பாள்; அரியன் என்பாள்; தலைவனை நெருங்கா வகையில் அகற்றுவாள்; அவன், தோழியிடம் மன்றாடிக் கேட்கவும் ஆவன்; அவள் இசைவைப் பெறுதலுமாவன்; பெற வாயா நிலையில் மடலேறுதல் கூறவும் ஆவன்.

பாங்கன் நிமித்தம்

ம்

தோழனால் உண்டாகும் கூட்டத்தைப்,

"பாங்கன் நிமித்தம் பன்னிரண் டென்ப”

என்பார் தொல்காப்பியர் (1050).

அவை: காட்சி, ஐயம், துணிவு, வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல், ஆக்கம் செப்பல், நாணுவரை இறத்தல், நோக்குவ எல்லாம்

அவையே போறல், மறத்தல், மயக்கம், சாக்காடு என்பன.

இவற்றுள் முதல் மூன்றும் கைக்கிளை; அடுத்த ஐந்தும் அன்பின் ஐந்திணை; இறுதி நான்கும் பெருந்திணை.

இவற்றை,

"முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே

பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே”

என்றும்,

"முதலொடு புணர்ந்த யாழோர் மேன

தவலருஞ் சிறப்பின் ஐந்நிலம் பெறுமே

(1051)

(1052)

என்றும் கூறுவனவற்றால் தெளிவிப்பார்.

"மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்”

L

என்னும் நெறியைப் பழைய உரையாசிரியர்கள் கொண்டமையால், முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே என்பதற்கு, அசுரம் பைசாசம் இராக்கதம் என்னும் மூன்று மணங்களையும், ‘பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே' என்பதற்கு, பிரமம் பிரசாபத்தியம் ஆரிடம் தெய்வம் என்னும் நான்கு மணங்களையும் பொருளாகக் கொண்டனர் (இளம். நச்.). “பாங்கன் நிமித்தம் பன்னிரண்டென்ப” என்னும் முன்னை நூற்பாவை (1050) அடுத்து வருதலை விட்டுப் (1051- 2) பொருந்தா மணத்தைப் பொருத்திக் காட்டினர் (1038).