உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

மறையோர் மணவகை

இவண், மறையோர் தேஎத்து மன்றல் எட்டும் பற்றிய குறிப்பை அறிதலும் வேண்டுவதாம். தள்ளத் தக்கதா கொள்ளத் தக்கதா என்பதற்கு உரிய பொருள் வேண்டுமே.

பிரமம்: நாற்பத்தெட்டு ஆண்டு பிரமசரியம் காத்தவனுக்குப் பன்னீராண்டுக் கன்னியை அணிகலம் அணிந்து கொடுப்பது.

பிரசாபத்தியம்: மைத்துன முறையான் மகள் வேண்டிச் செல்ல மறுக்காமல் கொடுத்தல்.

ஆரிடம்: தக்கான் ஒருவனுக்குப் பொன்னாற் பசுவும் காளையும் செய்து அவற்றினிடையே பெண்ணை நிறுத்தி அணிகலம் பூட்டி 'இவற்றைப் போல் நீங்கள் பொலிவுடன் வாழ்க' என வாழ்த்திக் கொடுப்பது. தெய்வம்: வேள்வி ஆசிரியனுக்கு வேள்வித் தீயின் முன் கன்னியைத் தட்சிணையாகக் கொடுப்பது.

கந்தருவம்: கந்தருவ குமரனும் கன்னியரும் தன்முன் தான்கண்டு கூடினாற் போல, ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்டுக் கூடி மணப்பது.

அசுரம்: 'கொல்லேற்றினை அடக்கியவன் இவளை மணத்தற் குரியன்;’ ‘வில்லேற்றினான் இவளை மணத்தற்குரியன்' எனக் கூறி வைத்து, அதன்படி செய்தாற்குக் கொடுப்பது.

இராக்கதம்: தான் விரும்பிய பெண்ணை அவள் விருப்பத்திற்கும் சுற்றத்தார் விருப்பத்திற்கும் மாறாக வலிந்து கவர்ந்து செல்வது.

பைசாசம்: மூப்புடையாள், உறங்குவாள், மதுமயக்கம் உடை ஆயோரைக் கூடுதல்.

யாள்

இவை தமிழர் மணமல்ல என்பது, 'மறையோர் தேஎத்து மன்றல்’ என்பதால் புலப்படும்.

மக்கட்சட்டம், அரசியல் சட்டம் என்பவற்றால் குற்றமாகக் கொள்ளப்படுவனவும் பட வேண்டுவனவும் எவையோ, அவையே இப்

-

பட்டியலாக அமைகின்றதாம்.

'பெண்ணடிமை' என்று பேசுவார் கண்ணுக்கு இவையெல்லாம் தட்டுப்படா போலும்!

‘காதல்’ அறம்! என்னும் ஒளவையுரைக்கு

மணங்களுள் ஒன்றற் கேனும் இடமுண்டோ?

வண்வகை

கந்தருவம் இடம் பெறாதோ எனின், ‘கண்டதும் கூடுதல்’ என்பது கந்தருவம். அவரை மணத்தல் வேண்டுவதுமன்று; ஏற்றதுமன்று; ஆதலால், களவு கற்பாதல் உயிரான தமிழ் மணத்தொடு எதுவும் ஒவ்வாததாம்.