உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

தமிழ் இலக்கணம், மொழி பற்றி மட்டும் கூறி அமைவது இல்லை. தமிழர் வாழ்வியல் விளக்கமாக மொழி அமைந்தமையைத் தொல்காப்பியம் தெளிவாகக் கூறும். அதன் பொருளதிகாரம், முழுநூறு தமிழர் செவ்விய வாழ்வியல் செப்பேடு என்பது வெளிப்படை.

குடும்ப வாழ்வுக்கு 'அகம்' என்ற அருமையும் குடும்ப வாழ்வு விரிவாக்கமாம். வெளிவாழ்வுக்குப் 'புறம்' என்ற பெற்றிமையும் எண்ணுதோறும் இன்பச் சுரப்பாம்.

திணை என்னும் கட்டொழுங்கே வாழ்வு என்று தெளிந்து அகத்திணை புறத்திணை ஆகிய இரண்டும் அறநெறிக்கு உட்படுத்திக் கட்டிக்காக்கும் திறம் வாழ்வியல் வல்லார் பாராட்டுக்கு உரியதாம்.

'அரசு' என்னும் அமைப்பும், காவல் கடனும், கலை விளக்கமும், அவாவறுத்த மெய்யுணர்வு மேன்மையும், ஆன்ம நேயப் பார்வையின் விழுப்பமும், அருளியல், பொருளியல், அறிவியல் மேம்பாடுகளும் எல்லாம் நாம் மூவாயிரம் ஆண்டு களுக்குப்பின் வந்தும், அன்று கொண்டிருந்த நெறிமை இன்றும் அறிந்து கொண்டு போற்றும் சீர்மையில் இலங்கித் திகழ்வது தொல்காப்பியமேயாம்.

எழுத்தின் பெயர் சுட்டுமாற்றாலே மெய்ப்பொருள் காட்ட இயலுமா?

உயிரியல் இயக்கம் உடலியல் நிலை என்பவற்றைத் தெளிவாக்க முடியுமா?

மக்கள் இயல் செயல் மாற்றங்கள் நேர்வகையை விளக்கக் கூடுமா?