உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

Xiii

சொல்லமைப்பிலேயே அதன் அடிமூலப் பொருள்

வழியை விளக்க வாய்க்குமா?

தனிவாழ்வியக்கம் கூட்டு வாழ்வு நாட்டு வாழ்வு இயக்க மென மாற்ற முறுங்கால், எய்த வேண்டும் பண்பாட்டுச் சீர்மை அளவீடு என்ன?

இவற்றை எல்லாம் நிலைமாறாது நின்று காட்டும். மலையென வெளிப்படக் காட்டி வியப்புறச் செய்யும் விழுப்பம் தொல்காப்பியம் போல ஒன்றற்கு இல்லை என்பதை மற்றை மற்றை இலக்கணங்களையும் மொழிகளையும் கற்றுத் துறைபோயவர் காட்டுதல் வியப்புக்குரியதாம்.

வழுவுதல் அமைந்த வண்ணனை மொழிநூலரும், தம் ஆய்வுக்குத் தொல்காப்பியக் களஞ்சியத்தில் இடமுண்டு என்று என்னும்போது வியப்பாக உள்ளது.

அத்தகு வான்கூடமாக அமைந்து தமிழர் வாழ்வியல் காட்டும் தொல்காப்பியத்தில் அவ்வப்போது கலந்து விட்டதும், கலக்கப்பட்டதுமாம் அழுக்குகளை அகற்றும் முயற்சியும் மூலத்தைச் சிதைக்காத முயற்சியும் மேற்கொள்ளப்பட்ட பெற்றிமையது இவ்வாழ்வியல் இலக்கணம் என்பதைச் சுட்டி அமைதல் முறையாம்.

-

-

இந்த அருமையான வெளியீட்டை எழிலொழுகும் வகையில் அச்சிட்டு தமிழர் கைகளில் தவழவிடும் தனித்தமிழ்த் தோன்றல் திரு. இளவழகனாரின் துணைவியார் இ. வளர்மதிக்கு இனிய நன்றி.

தமிழ்த் தொண்டன்

இரா. இளங்குமரன்