உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

இளங்குமரனார் தமிழ்வளம்

19

தலைவன் தலைவியர் சந்திக்கும் இடம் ‘குறி’ எனப்படும். அது இரவுக் குறி, பகற்குறி என இரண்டாம் (1076).

இரவுக் குறி' மனைக்கண் உள்ளார் ‘பேசும் ஒலி கேட்கும்’ அளவுள்ள மலை சார்ந்த இ L மாகும். ஆனால், அது மனைக்குள்ளிடம் ஆகாது (1077).

மனைக்கு அப்பாலானதாகவும் தலைவி அறிந்த இ L இருப்பதே ‘பகற்குறி’ இடமாகும் (1078).

மாகவும்

தலைவன் தான் குறியிடம் வந்ததைக் குறியால் அறிவிக்க, அக் குறியிடம் இல்லாத வேறு இடத்திற்குத் தலைவி சென்று அவனைத் தேடிக் காணாமல் வருதற்கும் நேரும் (1079).

மிக அமைந்த சிறப்பான இடம் வாய்க்குமெனில் ஆங்காங்குச் சென்று சந்தித்தலும் உண்டு (1080).

களவொழுக்கத்தின் போது நேரமும் நாளும் தவறிய நிலை தலைவனுக்கு இல்லை (1081).

வரும் வழியின் அருமை, நேரும் கேடு, அச்சம், இடையூறு என்ப வற்றைப் பற்றியவற்றால் நேரமும் நாளும் தவறுவதும் தலைவனுக்கு இல்லை (1082).

தலைவி காதலறம் கொள்ளுதலை அவள் தந்தை முதலியோர் அவள் குறிப்பாலேயே அறிவர் (1083).

தலைவியின் களவொழுக்கத்தைச் செவிலி அறிந்து கொண்டவாறு நற்றாயும் அறிவாள் (1084).

களவொழுக்கம் அரும்பிய நிலையில் இருந்து விரிந்து ஊரறியும் செய்தியாவது தலைவனாலேயே ஆம் (அம்பல் - அகத்து ஒடுங்கியிருந்த நிலை; அலர் = மலர்ந்து மணம் பரவுதல் போன்ற நிலை) (1085).

களவு வெளிப்பட்டபின் மணம் கொள்ளல், களவு வெளிப்படுமுன் மணம் கொள்ளல் என மணங்கொள்ளும் (வரைவு) வகை இரண்ட (1086).

கும்

வெளிப்பட்டபின் மணங் கொள்ளல் கற்புமணம் போன்றது. எனினும், முன்னே கூறிய ‘ஓதல் தூது பகை' வகைப் பிரிவுகளை மணம் கொள்ளுமுன் கொள்ளல் தலைவனுக்கு இல்லை. ஆனால், திருமணத்தை இடையே வைத்துப் பொருள் தேடுதற்காகப் பிரியும் பிரிவு ஒன்று மட்டும் அவனுக்கு உண்டு. இவையெல்லாம் களவியல் ஒழுக்கச் செய்திகள்.