உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறு விளக்கம்

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

115

‘கண்டதும் காதல்' என்பது அவ்வளவில் ஒழியாமல் இருப்பதற்காக இத்தனை வகைக் கட்டொழுங்குகளை நம் முந்தையர் விதித்திருந்தனர் என்பது,எண்ணி எண்ணிப் பாராட்டத்தக்க ஒழுகலாறாகும். “கண்டதும் காதல், கலைந்ததும் மறத்தல்” என்பதற்கு இடமில்லா நெறிமுறைகள் இவையாம்.

தலைவியும் தலைவனும் தாமே கண்டு ஒருமித்தனர். ஆனால், தலைவன் தோழனோ, தலைவி தோழியோ அறியாமல் அடுத்த நாள் அவர்கள் தாமே கண்டிலர்.

-

தோழன் ஆய்வு - இடிப்பு - கண்டிப்பு தடை என்பவற்றுக்கு ஈடு தந்தே தலைவன் தலைவியைக் காண முடிந்தது.

தோழியின் ஆய்வு மறைப்பு-மறுப்பு-புறக்கணிப்பு என்பவற்றுக்கு ஈடுதந்தே தலைவி தலைவனைக் காணமுடிந்தது.

தலைவற்குத் தோழன் ‘இடிக்கும் கேளி’ராகவே இருந்தான்.

தலைவிக்குத் தோழி இணையில்லா ‘அறிவுத் துணை'யாகவே திகழ்ந்தாள். அவளே, களவுக்கு இசைவு தந்து, கற்பு வாழ்வுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட துணிவாட்டி. அந் நிலையை அமைவாய்ச் செய்யமுடியா நிலையில், தாய்க்கு அறிவித்து உடன் போக்குக்கு வழிகாட்டி உரிமையறம் நிலை நாட்டுபவளும் அவள்.

இத்தகு கட்டொழுங்கு இல்லாமல் இருவராகவே காதலித்திருப்பின் அக்காதல் நீள்வதற்கும் நிலைப்பதற்கும் பொறுப்பாவார் எவர்?

நிழல்போல் தொடர்ந்து நீங்கா நெறிகாட்டும் நேயப் பிறவியர் இவர்கள். தோழன், தோழியர் என்னும் இவருள்ளும், தோழியின் பங்களிப்போ கற்பு வாழ்விலும் அருவியாய் ஆறாய்த் திகழும் நீர்மையது.

தோழி

தோழன் என்னும் சொல் பழந்தமிழ் நூல்களில் நான்கே நான்கு இடங்களில் மட்டுமே இடம் பெறுகிறது. ஆனால் தோழி என்னும் சொல்லோ 550 இடங்களில் வருகிறது. தோழி என்னும் சொல்லின் ஆட்சிப் பெருக்கம், அக வாழ்வில் அவள் ஆட்சிப் பெருக்கம்

உணர்த்துவதேயாம்.

அகத்திணை இலக்கியமே பெண்ணிலக்கியம் என்பர். “ஆங்குவரும் மாந்தர்களுள் பலர் பெண்பாலாரே; பாங்கன் ஒரு துறையளவில் வந்து போய் விடுகிறான்; பாணன் சிலபொழுது வருகிறான்,, தேர்ப்பாகன் கூற்றுக்குப் பெரிய இடமில்லை. தலைவனது தந்தை உடன்பிறந்தார் பற்றி