உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

117

விட்டு விட்டுத் தோழி வெள்ளத்திலே போனால், தலைவியும் போவாள் போலும்” என்பது அவன் நெஞ்சார்ந்த உரை.

இன்ன சிறப்பால் தான் தோழியைக் கூறும் தொல்காப்பியர், “தாங்கரும் சிறப்பின் தோழி” என்றார் போலும் (1060)!

66

கற்புமணம்

கற்பு மணம் என்பது என்ன? எனின்,

"கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்

கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே

OTTLIÐI (1088).

கரணமாவது சடங்கு; மணச் சடங்கு. கிழவற்குக் கொடுத்தற்குரிய முறைமையர் கொடுக்க, கிழத்தியைக் கொள்வதற்குரிய முறைமையர் கொள்வதே திருமணக் கொடையாகும். கிழவன் கிழத்தியரின் பெற் றோரைப் பெற்றவர்கள், இக் கொடையைச் செய்வராதலால் ‘தாதா’ எனப்பட்டனர். தாதா = கொடையாளர். அப் பெயர் ஆண்பால் அளவில் சுருங்கி, முறைப் பெயராக இன்று வழங்குகிறது. 'தாத்தா' என்பது அது. முழுத்தம்

திருமணச் சடங்கு முழுமதி நாளில் இரவுப்பொழுதில் நடந்தமை யால் அதனை ‘முழுத்தம் என வழங்கினர். அதன் அடையாளமே முழுத்தம் பார்த்தல், முழுத்தக்கால் நடுதல் என்பனவும், வளர்பிறை நாளில் மணவிழா

நடத்திவருவதுமாம்.

திருமணக்கரணம்

மணமக்களை நீராட்டி, புத்துடை உடுத்தச் செய்து, மக்களைப் பெற்ற மங்கையர் நால்வர் மங்கலவிழா நிகழ்த்தி, “கற்பினில் வழாஅ நற்பல உதவிப் பெற்றோன் பெட்கும் பிணையை ஆகு” என்று வாழ்த்தியமை அகநானூற்றில் 86ஆம் பாடலாகத் திகழ்கின்றது. அதன் 136ஆம் பாட்டும் அதனைச் சுட்டுகிறது. இம் முழுத்தமே ‘முகூர்த்தம்’ எனப்பட்டு, 24 மணித் துளி அளவு குறிக்கும் குறுங்காலமாகியும், அயன் மொழி வழியில் ஆகாச் சடங்கு நெறியாகியும் இந் நாள் நிகழ்வதாயிற்று.

திருமணப் போது இரவாக இருந்ததால் முழு நிலவு ஒளி இருப்பினும் விளக்கேற்றினர். ‘ஓமத்தீ’ வளர்த்திலர்; வந்தவர்க்கு உணவு வழங்கினரே அன்றி, வாளா எரியில் படைத்திலர். அம்மி மிதிக்கும் இழிமை ஏற்படவில்லை.