உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

மணமகள் கற்போடு இருந்தால், அருந்ததி விண்மீன் போல் விளங்குவாள். இல்லையானால், அகலியை கல்லானால் போலக் கெட்டு மிதிபடுவாள் என்னும் அடையாளமாம் ‘அரை கல்’லை (அம்மியை) மிதித்தல் அறிவுப் பிறப்பினர் ஏற்கத் தக்கதா?

மணமேடைக்கு வந்து சடங்குகள் பலவும் முடித்தபின், மணமகன், 'மணமகளை மணக்க மாட்டேன்' எனக் காசிச் செலவு மேற்கொள்ள லும், பெண்ணைப் பெற்றவன் அவன் பின்னே போய் அவனை வணங்கி, நன்மொழியுரைத்து மணமேடைக்கு அழைத்து வந்து மணம் செய்வித்த லும், சிந்தனை சிறிதேனும் உள்ளவர் ஒப்பும் செயலாகுமா? காசிக்குப் போகின்றவன் மேடைக்கு வந்து ஊடே எழுந்து போவது விழாவுக்கு வந்தோர் அனைவரையும், 'மூக்கறுத்துப் புள்ளி குத்துவது’ அல்லவா!

'உலகம் தட்டை என்பதே இறைமொழி' என்ற உறுதிப் போக்கின ரும் அஃது உருண்டை என ஒப்புக் கொள்ளும் அளவில், அறிவியல் வளர்ந்துள்ள போதிலும் கண்மூடித்தனத்தில் உருண்டு புரளல்தான் ‘கனமதிப்பு' என எண்ணுவாரும், எண்ணுவார் வழியில் நிற்பாரும் என்றுதான் சிந்திப்பாரோ?

தமிழன் தன்மானங் கெட்டுப் போன முதல் நாள், வடமொழி வழிச் சடங்கை ஏற்றுக் கொண்ட நாளேயாம்! அதன் விளைவு என்ன? தொல்காப்பியத் தூய தமிழ் நெறிகளையும் வடவர் நெறிப் பொருள்காட்ட உரையாசிரியர்களுக்கு இடம் ஆயிற்றாம். அதனைப் பின்னே காண்போம்.

உடன்போக்கு' என்பது, தலைவன் தலைவியரின் பெற்றோர் உற்றார் தொடர்பு இல்லாமல் அகன்று போன அயலிடத்து நிகழ்ச்சி. ஆங்கேயும் மணச் சடங்கு இல்லாமல் மணமக்கள் உடனுறைதல் இல்லை. அதனால், "கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான

என்றார் தொல்காப்பியர் (1089).

"மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்

கீழோர்க் காகிய காலமும் உண்டே”

என அக் கரணம் இல்லாக் காலமும், அக் கரணம் முன்னர்க் கொண்டாரும் அதன் பின்னர்க் கொண்டவரும் பற்றிய நூற்பா இஃது (1090). மூவர்

மூவர் என்பார் முடியுடைய மூவேந்தர் என்பவர். 'போந்தை, வேம்பே, ஆர் என வரூஉம் மாபெருந்தானையர்” என ஆசிரியரால் கூறப் பட்டவர். ‘முத்தமிழ்', 'முப்பால்' என்பவை போல, 'மூவர்' என்றால் எவராலும் அறியப்பட்டவர். அவர்கள் மூவர் குடியிலும் திருமணக் கரணம்