உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

ஐயன் என்பதுதானே ‘தமையன்’. தமையன் என்பாரெல்லாம் ‘ஐயன்’ சாதிதானா?

'இளமாஎயிற்றி இவைகாண் நின்ஐயர்"

என எயிற்றிக்குச் சுட்டுதல் ‘அப்பா’வா, சாதிப் பெயரா?

ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்தக் கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் வரும் ‘ஆசறு காட்சி ஐயர்’ சாதிப் பெயரா? களவுமணம் ஒப்பாத எண்மணப் பேறுடையார்க்கு,

“அறத்தொடு நின்றேனைக் கண்டு திறற்பட

என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்”

என்னும் குறிஞ்சிக்கலி பொருந்துவதா? 'இவர் அவர்' எனப் பகுக்கும் சாதிப்பிரிவு அல்லாத சால்புப் பெருமக்கள், எக்குடிப் பிறப்பினும் அவரெல்லாம் கரணம் வகுத்து வழிநடத்திய ஐயரே ஆவர் என்க.

களவுக் காதல் கற்பு அறமாகாதவகையில், ஓரீர் இடங்களில் உண்டாகிய பொய்யும் வழுவும் கண்ட குடிமைப் பெருமக்கள், அறமன்றச் சான்றோர்கள் ஆயோர் திருமணக் கரணம் செய்வித்து, ஊரறிய ஒப்புக்கொள்ள வைத்த பட்டயப் பதிவே ‘கரணம்’ ஆகும்.

“பொய்யாவது, செய்ததனை மறைத்தல். வழுவாவது, செய்ததன்கண் முடிய நில்லாது தப்பி ஒழுகுதல். கரணத்தொடு முடிந்த காலையில் அவையிரண்டும் நிகழாவாம் ஆதலால் கரணம் வேண்டுவதாயிற்று என்பது இளம்பூரணர் உரை.

நச்சினார்க்கினியரோ வேதமுறை மணமே பொருளாக்கினார். ஆனால், பொதுச் சடங்கு செய்தே தழும்பேறிப் போகிய செம்முது பெண்டிர் நடத்திய அகநானூற்றுப் LITTL ப லையே எடுத்துக்

காட்டினார் (136).

எடுத்துக் காட்டிய அளவில் மனத்தில் தடை ஒன்று ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா! நாம் எழுதும் உரை என்ன? எடுத்துக்காட்டும் மேற்கோள் என்ன? முழந்தாளுக்கும் மொட்டைத் தலைக்கும் போடும் முடிப்பு எனச் 'சிறிதளவேனும் சிந்திப்பானும் உண்மை அறிவானே' எனத் தோன்றியிராமல் போகியிருக்குமா? அவரே அறிவார்!

“கரணம் என்ப”, என்னும் தொடர்க்கு, “ஈண்டு ‘என்ப' என்றது முதனூலாசிரியரையன்று; வடநூலோரைக் கருதியது” என, ‘ஆடுகளம் அமைத்துக் கொண்டு' ஆட்டத்தில் தெளிவாக இறங்குகிறார் நச்சி னார்க்கினியர். “ஒருவர் சுட் ாமல் தாமே தோன்றிய கரணம், வேத நூற்கே உளதென்பது பெற்றாம்" என்று மேற்குறிப்பும் காட்டுகிறார்.