உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சுதளை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

121

“கரணத்தின் அமைந்து முடிந்த காலை

நெஞ்சுதளைஅவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும்

என்பது தலைவன் கூற்றுவகையுள் முற்பட நிற்பது (1092).

"கட்டிப் போடப்பட்டிருந்த நெஞ்சம் அக் கட்டினை நீங்கியது எதனால்? கரணம் முடிந்த உரிமை நிலையால்!" என்பது இதற்கு வெளிப் யான பொருள்.

படை

திருமணம் முடிந்து விட்

மையால் மனம் திறந்த மகிழ்வுடையன்

ஆனான் தலைவன் என்பது தானே குறிப்பு.

"இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழி வேட்கை தணியாது வரைந்தெய்துங்காறும் இருவர் மாட்டும் கட்டுண்டு நின்ற நெஞ்சம் கட்டுவிடப்படுதல்” என உரை கூறுகிறார் இளம்பூரணர்.

66

‘ஆதிக் கரணமும் ஐயர் யாத்த கரணமும் என்னும் இருவகைச் சடங்கானும் ஓர் குறைபாடின்றாய் மூன்று இரவின் முயக்கம் இன்றி ஆன்றோர்க்கு அமைந்த வகையால் பள்ளி செய்து ஒழுகி நான்காம் பகலெல்லை முடிந்த காலத்து,

ஆன்றோராவார், மதியும் கந்தருவரும் அங்கியும்.

களவிற் புணர்ச்சி போலும் கற்பினும் மூன்று நாளும் கூட்ட மின்மையானும் நிகழ்ந்த மனக்குறை தீரக் கூடிய கூட்டத்தின் கண்ணும்: அது நாலாம் நாளை இரவின் கண்ணதாம்” என உரை வரைந்து, குறுந்தொகை 101 ஆம் பாடலை எடுத்துக்காட்டி, ‘இது நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சி' என்கிறார். கற்பவர்தாம் முடிவு செய்து கொள்ளவேண்டும்!

"ஆசிரியன் சொல் எப்படி யிருந்தாலும், இப்படித்தான் உரை எழுதுவேன்” என உறுதி கொண்டமை தானே, இத்தகு இடங்களில் வெளிப்படுகிறது! எத்தகைய பேரறிஞர்! ‘அவர் அறியாத் தமிழ்நூற் கடற்பரப்பு ஏதேனும் இருந்திருக்க முடியுமா?' என ஆர்வ நெஞ்சத்தை ஆட்கொள்கிறாரே! 'இவரைப் போல உரை காணற் கெனவே பிறந்தார் எவரே?' என ஏங்க வைக்கும் அவர் ஏன், இப்படி எழுதுகிறார். இது தான் சார்ந்ததன் வண்ணமாதல் போலும்! அல்லது ‘இன்னான் எனப்படும் சொல்' என்பது போலும்!

கற்பில் கூற்றுவகை

கற்புக் காலத்தில் தலைவன் கூற்றுவகை முப்பத்தொன்றனைக் காட்டுகிறார். அவ்வாறே தலைவி, தோழி முதலியோர் கூற்று வகைகளை யும் கூறுகிறார் (1092 -1101).