உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

“ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது

வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென”த் தலைவன் தலைவியைப் பாராட்டலும்,

“அல்கல் முன்னிய நிறையழி பொழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும்

எனக் குறையுணர்ந்து பணிதலும், குடிவாழ்வுக்கு இன்றியமையாதவை. இவை தலைவன் கூற்றுள் இரண்டு (1092).

“உரிமை கொடுத்த கிழவோன் பாங்கின்

பெருமையில் திரியா அன்பின் கண்ணும்

என உரிமை உணர்ந்து தலைவி பெருமை போற்றுதல், உரிமை வேட்கைக் காலத்தும் போற்றத்தக்கது. இது தலைவி கூற்றுள் ஒன்று (1093).

"பிரியும் காலை எதிர்நின்று சாற்றிய

மரபுடை எதிரும்”

என்பது தோழி கூற்றுள் ஒன்று. தோழிக்கு இருந்த உரிமை, உறுதி, காவல் கடன் என்பவற்றைக் காட்டுவது இது (1096).

காமக் கிழத்தி என்பாளுக்கும் அகவாழ்வில் இடமிருந்ததால் அவள் கூற்றும் உண்டு. செவிலி, அறிவர் ஆயோர் கூற்றும் இடம்பெறும். வாயிலோர்

தலைவன் தலைவியர் ஊடற்கண் அதனை நீக்குவார் வாயிலோர் எனப்படுவர். அவர்கள் பாணர் கூத்தர் என்பவர். அவர்கள், உரிமையுடன் சென்று பழகும் இயல்பினர் ஆதலால் “அகம்புகல் மரபின் வாயில்” எனப்படுவர் (1098).

இனிய ஓரியல்

இல்வாழ்க்கையில் தலைவி வழியில் தலைவனும், தலைவன் வழியில் தலைவியும் நிற்றல் சிறப்பாதலால்,

“காமக் கடப்பினுள் பணிந்த கிளவி

காணும் காலை கிழவோற் குரித்தே

வழிபடு கிழமை அவட்கிய லான

என்றும் (1100)

“அருள்முந் துறுத்த அன்புபொதி கிளவி

பொருள்பட மொழிதல் கிழவோட்கும் உரித்தே

என்றும் (1101) கூறினார்.