உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலர் முதலியன

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

123

களவுக் காலம் கற்புக் காலம் இரண்டிலும் ‘அலர்’ உண்டு (1108). அவ் வலரில் தான் அன்புப் பெருக்கம் உருவாகும் (1109).

தலைவன் விளையாட்டும் அவ்வாறே பெருக்கும் (1110).

தலைவனுக்குச் சொல்லவிரும்புவனவற்றைப் பிறருக்குக் கூறுவது போல வாயில்கள் கூறல் உண்டு. அது ‘முன்னிலைப் புறமொழி' எனப்படும் (1113).

வேற்று இடத்திற்குச் சென்று தலைவி நிலையைத் தலைவனுக்கு உரைத்தலும், தலைவியிடம் வந்து வேற்றிடத்தில் இருக்கும் தலைவன் நிலையைக் கூறுதலும் பாணர்க்கு உண்டு (1115)

தாய் போல் கண்டித்தலும் தழுவிக் கொள்ளலும் தலைவிக்கு உரிய மனைக் கிழமையாம் (1119).

பிறவற்றை எண்ணுதற்கும் கூடாத பாசறைக்குப், பெண்ணொடு செல்லுதல் இல்லை (1121).

புறப்பணி புரிவார்க்கு அக் கட்டளை இல்லை (1122).

தன்னைப் புகழ்ந்து கூறும் சொற்களைத் தலைவன் முன் தலைவி மேற்கொள்ள மாட்டாள் (1126). ஆனால், அவன் அயன்மனை சார்ந்து பின் இரந்து நிற்றலும் தெளித்தலும் ஆகிய இடங்களில் அவள் தற்புகழ்தலும் கொள்வாள் (987).

தலைவன் சொல்லை மறுத்துக் கூறுதல் பாங்கனுக்கு உண்டு (1127).

ஆனால் அம் மறுத்துக் கூறல் மிகுதியாக இராது (1129).

பிரிவுக்குத் தலைவி வருந்தும் இடத்தெல்லாம் அவளை வற்புறுத்தித் தேற்றிச் செல்வதே தலைவன் வழக்கம் (1130).

பிரிந்து செல்லுதற்கு ஏற்படும் இடைத்தடை, செலவைத்தடுத்தல்

இல்லை. தேற்றிச் செல்வதற்கே உதவும் (1131).

தலைவன் மேற் கொண்ட வினைப்பொழுதில், தலைவி நிலைபற்றி எவரும் உரையார். அவன் வினைமுடித்த போது, தலைவி நிலை அவனுக்குத் தானே தோன்றும் (1132).

பூப்புண்டாகிய நாளில் இருந்து பன்னிரண்டு நாள்கள் தலைவன் தலைவியைப் பிரியான். ஏனெனில், அந் நாள் கருவுறும் நாள் ஆதலின்

(1133).

ஓதல் பிரிவு மூன்றாண்டுக்கு மேற்படாது (1134).