உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

“பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே

நிலத்திரி பின்றஃது என்மனார் புலவர்

என்றார். நால்வர்=நானிலத்தவர். 'நால் வருணத்தவர்க்கும்' என்று வழக்கம் போல உரைகண்டனர் பழைய உரையாசிரியர்கள் (1170).

நிலமக்கள், தலைமக்கள், அடியோர், வினைவலர் ஆகிய நால்

வகையார்க்கும் எனக் குறிப்பு எழுதுவார் இளவழகனார்.

தலைவிக்கு உடன்போக்குக் கொள்ளவேண்டும் என்றும், திருமணம் நிகழ்தல் வேண்டும் என்றும் ஏற்படும் உந்துதல்களை “ஒருதலை உரிமை வேண்டியும்” என்னும் நூற்பாவில் கூறுகிறார் ஆசிரியர் (1171).

உறுதியாக இல்லற வாழ்வு மேற்கொள்ளல் வேண்டும் என்னும் நிலையிலும், ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ ஆதலால், அது குறித்துப் பிரிவு நேரும் என்னும் அச்சம் ஏற்பட்ட நிலையிலும், அம்பல் அலர் என்பவற் றால் களவொழுக்கம் வெளிப்பட்டுப் போகும் என்னும் அஞ்சுதல் உண்டாகிய நிலையிலும், தன்னைத் தலைவன் காண வருங்கால் ஏற்படும் இடையூறு பற்றி எண்ணிய நிலையிலும் தலைவிக்கு உடன்போக்குப் பற்றியும் மணங்கொள்ளல் பற்றியும் உந்துதல் உண்டாகும். சூழலால் உண்ட ாம் எண்ணங்கள் செயலூக்கியாகத் திகழும் அடிப்படையை விளக்கியது இது.

எவ்வொரு வினைப்பாட்டுக்கும் சூழலும் எண்ணமும் தூண்டலாய் அமைந்து துலங்கச் செய்யும் என்னும் வரையறை நல்ல தெளிவுறுப்புச் செய்தி.

வாழ்வுக்குத் தேவையான இரக்கம் எப்பொழுது உண்டாகும் எனின் ஒருவர் கொண்ட வருத்தத்தைத் தானும் உணரும் போதேயாம். நோவற்க நொந்தது அறியார்க்கு என்பது வள்ளுவம். “துயரத்தை அறிந்து கொள்ளாதவர்க்குத் துயரை உரையாதே” என்பது அது. இரக்கம் உண்டாக்கும் அருள் வாழ்வு துயரம் கண்டபோது ஏற்படுவது ஆகலின், “வருத்த மிகுதி சுட்டும் காலை

உரித்தென மொழிப வாழ்க்கையுள் இரக்கம் ”

என்றார் தொல்காப்பியர் (1172). வாழ்வின் வளர்நிலை இன்புரை கேட்ட லினும் துன்புரை கேட்டு அருள்வதிலேயே உள்ளது என்பது அருமை மிக்கது. ஊடற் போதில் தலைவி உயர்வு விளக்கமாம். அதேபொழுதில் தலைவன் பணிவும் விளக்கமாம் (1173). அவ்வூடற் பணிவு இல்லையேல் கூடலின்பம் கொள்ளான்! “மகளிர் ஊடல் தணிக்கவும் பணியேன்” என்பது இல்லறத்திற்கு ஏற்காத செயல்.