உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

131

கற்பொழுக்கத்தின் போது தலைவன் தலைவியர் இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்வதை விலக்கார்; புகழ்தல் இல்லறம் சிறக்க வாய்ப் பாம் என்றது இது (1174).

ம்

முன்னே உரைத்த உள்ளுறை உவமம் போல இறைச்சி என்ப தொன்றும் அகப்பொருளில் இடம் பெறும். இறைச்சி என்பது கூறும் பொருளுக்கு அப்பாலாய் அமைவது.

“இறைச்சி தானே பொருட்புறத் ததுவே

என்பது அதன் இலக்கணம். சொல்ல வேண்டிய கருத்துக்கு வேறாக அடைமொழி அமைவில் நின்று பயன்செய்வது. 'பொருட்புறத்ததுவே’ என்பதற்கு ‘உரிப்புறத் ததுவே' என்பது இளம்பூரணர் பாடம். பொருட் புறத்ததுவே என்பது நச்சினார்க்கினியர் பாடம்.

இறைச்சியை ஆராய்ந்து பார்த்தவர்க்கு வெளிப்படக் கூறும் பொருளுக்குப் புறத்ததாகிய பொருள் உள்ளமை புலப்படும் என்பதை, “இறைச்சியிற் பிறக்கும் பொருளுமா ருளவே

திறத்தியல் மருங்கில் தெரியு மோர்க்கே

OTÖÖLITI (1176).

அன்பு கொள்ளத் தக்க கருத்துகளைக் கருப்பொருள்களின் உரைப் பொருளாகக் காட்டித், தலைவி வருந்தும் போது வற்புறுத்தித் (தோழி) தெளிவு செய்தல் ‘வன்புறை' எனப்படும் (1177).

தலைவியைத் தலைவன் பாராட்டின் அவளுக்கு இருவகையில் அச்சம் உண்டாகும். ஒன்று, பொருள் தேடுதற்குப் புறப்படுவனோ என்னும் அச்சம். மற்றொன்று, செயல் மேற்கொண்டு பிரிவனோ என்னும் அச்சம். இரண்டுமே பிரிவச்சமாம் (1178).

தலைவி அயலாள் ஒருத்தியைப் பாராட்டினால் உள்ளே ஊட ல்

உண்டு என்பதன் வெளிப்பாடு அது என்பர் (1179).

பிறள் ஒருத்தி இத்தகையள் எனத் தலைவி பாராட்டின்,அது பற்றித் தலைவன் குறிப்பறிவதற்குரிய வழியுமாகும் (1180).

தலைவன் குறையை அயல் பெண்டிர் உரைக்கும் போதும் தானே உணரும் போதும் உடனே இடித்துரைக்காமல் அவன் அன்பு கெழும் நிற்கும் போதும் ஊடி நிற்கும் போதுமே கூறுவள். கூறுவதைக் கூறினாலும் கூறுதற்கு இடமும் காலமும் அறிந்து கூறுதலே கூறுதல் பயன் செய்யும் என்னும் உளநிலை உரைத்தது இது. இடித்துரை கூறுவாரும் அறிவுரை கூறுவாரும் எண்ணிப் போற்ற வேண்டிய குறிப்பு ஈதாம் (1181).