உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

குறித்த காலம் கடக்கு முன்னரே அக்காலம் கடந்து விட்டதாகக் கூறுதல் மடமை, வருத்தம், மயக்கம், மிகுதி என்னும் இந் நான்கனாலும் ஏற்படும். தன்னிடம் மன்றாடி நின்ற தலைவனைத் தோழி அப்பால் படுத்துதல் அன்றி மெய்யுரைத்தல், பொய்யுரைத்தல், நயந்துரைத்தல் எனப் பலவகைப் ‘படைத்து மொழி'களாலும் நலம் பேணிக் காப்பாள் (1183).

புகழ்ந்து கூறுதலை மறுத்துக் கூறுதலும், ஐயுற்றுக் கூறுதலும் தலைவனுக்கு உண்டு. (அதனைத் தலைவி கொள்ளாள்) (1184).

துன்பம் எதுவும் நேராமல் காத்தல் தன் கடமை ஆதலால் தோழிக்குத் துணிந்துரைக்கும் உரை உண்டு (1185) தலைவன் தலைவியரைப் புகழ்ந்துரைக்கும் நிலையும் உண்டு (1186).

ஊடல் தீர்க்கும் வாயிலாக இருப்பவர் தம் சொல்லைக் குற்றமற்றதாய் வெளிப்படக் கூறுவர் (1187).

முன்னே கூறிய உள்ளுறை என்பது, உடனுறை, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என ஐவகைப்படும் (1188). இவையன்றி இன்பப் பொ பொருளாகவும் உள்ளுறை வரும் (1189).

மங்கலச் சொல், வசைச் சொல், மாறுபாடில்லாத ஆளுமையால் சொல்லிய சொல் என்பனவும் உள்ளுறையுள் அடங்கும் (1190) (இவற்றின் விளக்கம் உவமைப் பகுதியில் காணலாம்)

தலைமக்கட்கு ஆகாக் குணங்களாம் சினம் அறியாமை பொறாமை வறுமை என்னும் நான்கும் ஏதேனுமொரு காரணத்தால் அவர்களொடு தொடர்பு படுத்திக் கூறுதல் உண்டு (1191).

தோழி தலைவியை ‘அன்னை' எனலும், தலைவி தோழியை 'அன்னை' எனலும் இருவரும் தலைவனை ‘என்னை’ எனலும் பழமை யான மரபினதாம். சொல்லாலும் எழுத்தாலும் வெளிப்படாத உலகியல் முறை என்பர் புலமையர் (1192). ஒப்பு, உரு, வெறுப்பு, கற்பு, ஏர், எழில், சாயல், நாண், மடன், நோய், வேட்கை, நுகர்வு என்பவை இத்தகையவை என்பது கொண்டு மனத்தால் கொள்ளுவதை அல்லாமல் வேறுவகையால் வெளிப்படக் காட்

இயலாதவையாகும்.

“நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது

காட்ட லாகாப் பொருள என்ப"

என்பது இதன் முடிநிலை (1193).

இமையவர் உலகம், கடலொலிக்கும் உலகம் என எவ்வுலகம் எனினும், ஒப்பு உரு முதலியவை இல்லாத காலம் இல்லாமையால் சொல்லைச் சொல்லிய வகையாலே பொருள் அறிந்து கொள்வர் என்பதாம்.