உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

உளவியல் தேர்ச்சி காட்டும். இத் தேர்ச்சியின் வயப்பாடே, திருவள்ளுவர் 'நகையும் உவகையும் கொல்லும் சினம்’ என முதலும் முடிவுமாகியவை இணைத்த இணைப்பாம்.

ஒவ்வொரு மெய்ப்பாடும் தோன்றும் காரணங்களை நான்கு நான்காகக் கூறுகிறார் தொல்காப்பியர்.

“எள்ளல் இளமை பேதைமை மடனென்று

உள்ளப் பட்ட நகை நான்கு என்ப

என்பது நகைச்சுவைக்குக் காரணமானவற்றைக் கூறியது (1198).

எள்ளலாவது இகழ்தல்; எள்போல் சிறிதாக எண்ணிக் கூறுதல்.

இருவர் இருந்தனர் ஓர் இருக்கையில், இடையே இருந்த இடத்தில் ஒருவன் வந்து அமர்ந்தான். அவன் அழுக்குடை கண்டு “நீ முட்டாளா, மடையனா?” என்றான் இருந்த ஒருவன். “இருவருக்கும் இடையே இருப்பவன் யான்" என்றான். எள்ளல், மீட்டோர் எள்ளலும் ஆகியது இது. நடக்க முடியாமல் தத்திப்பித்தி நடக்கும் குழந்தை நடை, அக் குழந்தை பேசும் மழலை நகைச்சுவைக்கு இடமாகி இன்பம் பயத்தல் கண்கூடு. ஆரியர் கூறும் தமிழ் நகைச்சுவைக்கு எடுத்துக்காட்டாதலைக் கூறும் செயிற்றியம். அதனை உரையில் காட்டுவார் பேராசிரியர். ஆங்கிலர் பேசும் தமிழும் அத்தகையதே. மொழிநிலையில் அவர்கள் இளமையராகத் தோன்றுதலே நகைக்கு இடம் தந்தது என்க.

பேதைமை

ம்

பேதைமைத் தன்மை; அறியாத்தனம். அதனைக் காணும்போது நகைச் சுவை உண்டாகும்.

சு

ஒருத்தி கைக்குழந்தை வைத்திருந்தாள்; அவள் கூந்தல் அவிழ்ந்து விட்டது. முன்னே அவள் அக்கை இருந்தாள். அவர்களுக்கு இடையே ஒருதூண்! தூணின் ஒருபக்கம் இருந்து கொண்டு குழந்தையை நீட்டினாள் தங்கை. அக்கை, தூணின் இருபக்கமும் இரண்டு கைகளையும் நீட்டிக் குழந்தையை வாங்கினாள். இந்தக் காட்சியை எண்ணின் நகைப்பு வராமல் போகுமா? நேரிலே கண்ட ால்... 'யான் கண்ட து இது. மூன்றாமவர் குழந்தையை வாங்கியபின், 'ஏதோ தோன்றியதுபோல்' மூவரும் நகைத்தனர்..

மடமை

LDL மை என்பது அறிவுறுத்தக் கேட்டாலும், தான் கொண்ட கருத்தை மாற்றிக் கொள்ளாமல், அறிவுறுத்துவானையும் அறியாத வனாகக் கருதுதல், “காணாதாற் காட்டுவான் தான்காணான்; காணா தான், கண்டா னாம் தான்கண்ட வாறு” என்பது போன்ற தன்மை (குறள். 849)