உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

155

அறிவுறுத்தியதைக் கேட்டு அதை விடாப்பிடியாகக் கொள்ளும் ‘மடம்' ஓர் உயரிய பண்பியல். மகளிர்க்கு உரியதாகவும், துறவர்க்கு உரியதாகவும் அமைந்த மடம் அது. முன்னது தன்மை, பின்னது அத் தன்மையர் - உறையும் இடம்.

இம் மெய்ப்பாடுகளுக்கெல்லாம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டு வழங்குகின்றனர் இளம்பூரணரும் பேராசிரியரும். சங்க இலக்கியம் வாழ்வியல் இலக்கணமாக இருப்பதன் சான்று அது. அதன் இலக்கணம் தொல்காப்பியத்தில் உண்டு என்றால், அதன் பொருள் என்ன? தொல்காப்பியர்க்கு முன்னரே பரவிக் கிடந்த வழக்காறும் இலக்கியங் களும் இலக்கணங்களுமே அவர் தொகை நூலுக்கு மூலப்பொருள்களாக இருந்தன என்பதை நோக்கத் தமிழ்மாந்தர் தொன்மையும் கலைச் சிறப்பும் பண்பாட்டு முதிர்வும் புலப்படும். செயிற்றியத்தில் இருந்து இளம்பூரணர் காட்டும் பாட்டு அதனை இழந்து விட்ட நம்மை வாட்டவே செய்யும்.

நகைக்கு மூலமாம் எள்ளல் முதலியவற்றைத் தம் எள்ளல் அடியாக வும், பிறர் எள்ளல் அடியாகவும் ஒன்று இரண்டாதலை விளக்குவர் உரையாசிரியர்கள். அவ்வாறே தம் இளமை, பிறரிளமை எனக் கூறி எள்ளல் முதலிய நான்கையும் எட்டாக்குவர். உரிய சான்றும் காட்டுவர்.

அழுகை

அழுகைச் சுவை, இளிவு (இழிவு), இழவு, அசைவு (முன்னிருந்த நிலையில் தாழ்தல்), வறுமை என்பவற்றின் வழியாகத் தோன்றும் (1199). இழிவு இகழ்ந்து பேசுதலால் உண்டாவது; இழிவு இழப்பின் வழிவரு வது; அசைவு - பழம் பெருமை, மதிப்பு ஆயவை குன்றல்; நிலைதாழ்தல்; வறுமை, துய்ப்புக்கு வழியில்லாமை;

"பட்ட இழிவும் பழித்த இழிவும் பக்கம் பக்கம் எண்ணின் எண்ணுவார்க்கு ‘இளி’வின் அழுகை புலப்படும். இழவின் அழுகையே, ‘ஒப்பாரி”; ‘கையறுநிலை’ப் பாடல்கள். அசைவின் பாடே, பாரிமகளிரை வருத்திக் கிளர்ந்த பாட்டு!

66

‘“அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்

எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்

இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்

வென்றெறி முரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே”

என்பது அது (புறம்.112).

வறுமை அழுகைப்பிழிவு,

"இன்றும் வருவது கொல்லோ நெருநலும்

கொன்றது போலும் நிரப்பு”