உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

என்பது (குறள். 1048). அசைவு என ஒன்று இருந்தாலும் நான்கும் அசைப்பனவேயாம்.

விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்து அதற்கு மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்ததும், அழுகையொடு ஒத்ததாகலின் இளிவரலையும், தான் இளிவந்து பிறிதோர் பொருளை வியக்குமாதலின் இளிவரலின் பின் வியப்பையும், வியப்புப் பற்றியும் அச்சம் பிறத்தலின் அதனை அடுத்து அச்சத்தையும், அச்சத்திற்கு மறுதலையாகிய வீரத்தை அதன் பின்னும், அவ் வீரத்தின் பயனாகிப் பிறர்க்குவரும் வெகுளியை அதன்பின்னும், வெகுளிக்கு மறுதலையாகவும் ஓதுதற்குச் சிறந்ததாகவும் முதலாவது சொல்லிய நகைக்கு இயைபானதாகவும் அமைந்த உவகையை இறுதியிலும் வைத்தார் என வைப்பு முறை காட்டுவார் பேராசிரியர்.

நகை போலவே அழுகை முதலியனவும் தன்னிடத்துத் தோன்று தலும் பிறரிடத்துத் தோன்றுதலும் என எட்டாக்குவார் பேராசிரியர்.

L

6

இளிவு - பிறர் இகழ்விற் பிறக்கும் அவலம். 'இழிவே' என்னும் பாடம் சிறக்கும் என்பார் நாவலர் பாரதியார். இளிவரல், மானம் குன்ற வருவது. "இளிவரின் வாழாத மானமுடையார்” எனவும் “இடுக்கண் வரினும் இளிவந்த செய்யார்” எனவும் வருதலான் இப் பொருட்டாதலை அவர் விளக்குவார். இளிவு, பழிபடு குற்றமின்றியும் வரும் ஆதலால் தன்னெஞ்சு சுடுதல் இன்மையால் வாழ்வு வெறுப்பு விளையாது. இளிவரல் உயிர்வாழ ஒல்லாமல் குன்றவரும் நிலையிழிவைக் குறிக்கும் என வேறுபாடும் காட்டுவார்.

இளிவரல், மூப்பு பிணி வருத்தம் மென்மை ளிவரல்,மூப்பு உண்டாகும் (1200).

என்பவற்றால்

முற்றத் தளவும் போக முடியாத முதுமையின் வாழ்வை வெறுக்கும் தாய் நிலையும், பசிப்பிணிக் கொடுமையில் மனைவியும் மக்களும் வருந்தும் வருத்தமும் தம் நொய்ய வாழ்வும் எடுத்துக்காட்டும் ஒரு பாட்டு (புறம்.159). இளிவரல் விளைவு விளக்கம்:

"குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்

ஆளன் றென்று வாளில் தப்பார்

தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய

கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்

மதுகை இன்றி வயிற்றுத்தீத் தணியத்

தாமிரந் துண்ணும் அளவை

ஈன்ம ரோஇவ் வுலகத் தானே