உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

கள்வர் அச்சம் தந்த பாதுகாப்பே கதவு, பூட்டு, அரண், அகழ், காவல், ன்னவை. கள்வன் வலியனா காப்பு வலியதா என்பது முடிவுக்கு வராத பொருளாகவே என்றும் உள்ளது.

இறை - கடவுள், ஆள்வோன், ஆட்சி அலுவலன், தலைவன் ஆய பல பொருள் ஒரு சொல்.

"கடுங்கோல் மன்னர் வாழும் நாட்டில்

கடும்புலி வாழும் காடே நன்று

என்பது அரசன் அதிவீரராம பாண்டியன் பாடியது.

ஆசிரியரைக் கண்டு ஓட்டமெடுத்த மாணவர் ஒளிந்தது மட்டு மில்லை; ‘கழிந்ததும்' உண்டு. எழுத்தறி வித்தவன் இறைவன் எனப்பட்ட காலம் இருந்தது முதியர்க் கேனும் நினைவில் நிற்கும்.

பெருமிதம்

பெருமிதம் வேறு செருக்கு (தலைக்கனம்) வேறு. பெருமிதப் பேறும் தலைக்கனத் தாழ்வும் எதிரிடைகள்.

"பெருமை பெருமிதம் இன்மை சிறுமை

பெருமிதம் ஊர்ந்து விடல்

29

என்னும் குறள் (979) விளக்கம் இரண்டும். பெருமிதச் சுவைக்களம்,

“கல்வி தறுகண் இசைமை கொடையெனச் சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே

ÖTÉLIÐI (1203).

கல்விச் சிறப்பு, போரில் காட்டியவீறு, வழிவழிப் புகழ், இணையிலா ஈகை என்பவை அவர்க்கே யன்றி அவர் பெற்றோர்க்கும் சார்ந்தோர்க்கும் பெருமிதம் தரும்.

கற்றவன் கொண்ட பெருமை கற்பித்தவனையும் உயர்த்திப் பிடிக்கிறதே! ஆயிரத்தில் ஒரே ஒருவன் பெற்ற கல்விச் சிறப்பு, அவ் வாசிரியன் மதிப்பை நாடறிபொருளாக்கி விடுகின்றதே!

ஏனாதி என்னும் பட்டம் தறுகண் வழியாகப் பெற்றமை வரலாறு.

மார்பு கொண்ட வேல் மறு பக்கம் துளைத்துச் செல்ல, புறப்புண் எனக் கொள்ளவும் நேருமே என வடக்கிருந்து உயிர் துறந்த புகழாளன் புகழ், வென்றவனையும் வென்றவன் ஆக்கிற்றே.

66

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக! களியியல் யானைக் கரிகால் வளவ!

சென்றமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற