உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப்புகழ் உலகம் எய்திப்

புறப்புண் நாணி வடக்கிருந் தோனே”

என்னும் புறப்பாட்டு (66).

159

வ. உ. சிதம்பரனார், வீரபாண்டியக் கட்டபொம்மன் போர்வீறு நாடறிய லாயது, மெய்ப்பாட்டுத் திறத்தாலேயே! அவர்களைப் பற்றிய நூலைக் கற்றார் ஆயிரத்தில் ஒருவரும் அருமையே!

கொடைப் பெருமிதம் என்ன, முல்லை பல்லைக் காட்டிப் பாடியா பாரியிடம் தேர்ப்பரிசு பெற்றது! உடுத்தாது போர்த்தாது என அறிந்தும் மயிலுக்குப் ‘படாம்’ வழங்கினானே பேகன்! ஏன்?“வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய” எனப் பாடுபுகழ் பெற்றானே குமணன்! இவை பெருமித மாதல் இவர் வேடமிட்டு நடிப்பார்க்கும் கிட்டுகின்றதே!

வெகுளி

"உறுப்பறை குடிகோள் அலைகொலை என்ற வெறுப்ப வந்த வெகுளி நான்கே’

என்பது வெகுளிச் சுவை நூற்பா (1204).

காலை வெட்டுதல் கையை வெட்டுதல் கண்ணைத் தோண்டுதல்

உறுப்பறை.

குடிகோள் ஒருகுடியையே முற்றாக அழித்தல். ஒருவன் செய்த குற்றத்திற்கு அவனைச் சார்ந்தாரையெல்லாம் கெடுத்தல்.

அலை - அலைக் களித்தல். அலைத்தலோடு அமையாமல் அதற்கு

மகிழ்தல். பிறர்துயர்ப்படுதல் கண்டு களிப்புறுதல்.

கொலை: நன்றிமறத்தலையும் கொலையாகக் கண்ட தமிழ் மண்ணில், “கொள்ளும் பொருளிலர் எனினும் தலை துள்ளுநர்க்காண்மார் தொடர்ந்துயிர் வெளவுதல்” கலித்தொகைச் செய்தி.

உவகை

உவகைச் சுவை நான்கும்,

"செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென்று

அல்லல் நீத்த உவகை நான்கே”

ÖTÖÖTLIÐI (1205)

உனக்கு உவகை வந்தால் என்முதுகுக்கு ஒட்டுப் போட வேண்டும்” என்று வருந்திக் கூறினான் தன் நண்பனிடம்.