உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமை வகை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

“வினை பயன் மெய்உரு என்ற நான்கே

வகைபெற வந்த உவமத் தோற்றம்

167

என உவமை வகைகள் இவை எனக் கூறுவார் (1222). உவமை ஒவ்வொன்றும் தனித்தனியே வரும் என்பது இல்லை. இரண்டு மூன்று சேர்ந்து வருதலும் உண்டு.

வினையும் பயனும் ஓர் உவமையில் இருக்கலாம்.

ஓர் உவமையில் வண்ணமும் வடிவும் பொருந்தியிருக்கலாம்.

உவமையாகக் கூறுவது உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது ஆசிரியர் ஆணை (1224). பெருமை நன்மை காதல் வலிமை என்பவற்றை நிலைக்களமாகக் கொண்டுவரும். தாழ்ந்த பொருள் உவமையாவதை ஏற்கும் இடமும் உண்டு என்றும் கூறுவார் (1226). ஆனால் அத் தாழ்ந்ததி லும் உயர்ந்த தன்மையே உவமையாக்கப்படும் என்பது குறிப்பு. நன்றியறி தலுக்கு,

66

நாயனையார் கேண்மை கெழீஇக் கொள வேண்டும்” என்று

உவமைப்படுத்துவது இல்லையா! அதுபோல்.

முழுமையான பொருள் முதல்; முதற் பொருளின் உறுப்பாக அமைந்தது சினை. முதற் பொருளுக்கு முதற்பொருளும், முதற் பொரு ளுக்குச் சினைப்பொருளும், சினைப் பொருளுக்கு முதற் பொருளும், சினைப் பொருளுக்குச் சினைப் பொருளும் உவமையாதல் உண்டு.

“மலை போன்ற யானை -முதலுக்கு முதல் உவமை

“தாமரை அன்ன தண்குடை

-முதலுக்குச் சினை உவமை

"பனை நெடுங்கை க

-சினைக்கு முதல் உவமை

"ஆடுகை கடுப்பத் திரிமருப்பு’

(கடுப்ப - போல; மருப்பு கொம்பு)

சினைக்குச் சினை உவமை

“பவழச் செவ்வாய்”

என்பது பவழத்தை வாய்க்கு உவமை காட்டியது.

எதனால் உவமையாயிற்று எனின், செம்மை என்னும் நிறத்தால் வமையாகியது. பவழ நிறமும் வாயின் நிறமும் சிவப்பு ஆதலால் உவமையாம். இதில் செம்மை என்பது வெளிப்படத் தெரிய உவமை அமைந்துள்ளது.இவ்வாறு வெளிப்படத் தெரியா வகையில் ‘பவழவாய்’ எனினும் உவமையே.