உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

இரண்டும் உவமையே எனினும் முன்னதில் செம்மை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. பின்னதில் அப்படிக் காட்டப்படாமல் மறைந் துள்ளது. ஆதலால் முன்னது சுட்டிக் கூறிய உவமை; பின்னது சுட்டிக் கூறா உவமை என்கிறார் ஆசிரியர்.

"சுட்டிக் கூறா உவமை யாயின்

பொருளெதிர் புணர்த்துப் புணர்ந்தன கொளலே"

என்பது அது (1228).புணர்த்து-பொருத்தி; புணர்ந்தன - பொருந்துவன. எடுத்துக் கொண்டது எதுவோ அது, பொருள்.

அதற்கு ஒப்புமை காட்டப்படுவது எதுவோ அது, உவமை. இரண்டும் பொருந்த அமைதல் வேண்டும். (1229).

பொருள் என்பதைப் பிற்காலத்தார் உவமேயம் என்றனர்.

உவமை என்பதை உவமானம் என்றனர்; ஒப்பினைப் பொதுத் தன்மை என்றனர். இரண்டற்கும் அமைந்த இணைப்புச் சொல்லை உவம உருபு என்றனர். அவ்வுருபு வெளிப்பட இருந்தால் உவம விரி என்றும், மறைந்திருந்தால் உவமத் தொகை என்றும் வழங்கினர்.

முத்துப்பல் என்பது முத்துப் போன்ற பல் என உவமை ஆகும்.

இதில், ‘பல்’ பொருள்; ‘முத்து' உவமை.

ஆனால், இவ்வாறு அன்றிப் ‘பல் முத்து' எனினும் உவமையாகும் என்றார் ஆசிரியர். அதனை,

"பொருளே உவமம் செய்தனர் மொழியினும்

மருளறு சிறப்பின் அஃதுவமம் ஆகும்

என்பது (1230). இதனை உருவகம் என்பது பிற்கால வழக்கு

பொருளினும் உவமை பெரியதாகவும் சிறியதாகவும் இருத்தலும் உண்டு. அலைக் கூந்தல் - அலைபோலும் கூந்தல் (பெரியது); ஊசிக் கோபுரம் - ஊசிபோலும் கோபுரம் (சிறியது) (1231).

உவமை என்பதை உணர்த்தும் சொற்கள் இவையென அடுக்கிக் கூறுகிறார் ஆசிரியர். அப் பட்டியைப் பார்த்த அளவிலேயே வாழ்வுக்கும் உவமைக்கும் உள்ள நெருக்கம் புலப்படும்.

அன்ன, ஏய்ப்ப, உறழ, ஒப்ப, என்ன, மான, ஒன்ற, ஒடுங்க, ஒட்ட, ஆங்க, வென்ற, வியப்ப, எள்ள, விழைய, விறப்ப, நிகர்ப்ப, கள்ள, கடுப்ப, காய்ப்ப, மதிப்ப, தகைய, மருள, மாற்ற, மறுப்ப, புல்ல, பொருவ, பொற்ப, போல, வெல்ல, வீழ, நாட, நளிய, நடுங்க, நந்த, ஓட, புரைய என்பன ஆசிரியர் கூறுவன. முப்பத்தாறு உருபுகளைக் குறித்து விட்டு ‘அன்னவை