உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

169

பிறவும்' எனச் சேர்த்துக் கொள்ளக் கூறுகிறார். அப்படிச் சேர்ந்தவை பல (1232).

66

“அவன் ‘கணக்காக இவன் உள்ளான்' “அவள் ‘கணக்காக' இவள் பேசுகிறாள்

இவண்

கணக்காக' என்னும் பொருள்தரும் உவமை

உருபு.

இயல்பாக இறந்து கிடப்பவனுக்கும் உறங்கிக் கிடப்பவனுக்கும் வெளித் தோற்றத்தில் வேறுபாடு இல்லை. ஆதலால் ‘செத்து' என்பது உவமை உருபாயிற்று. ‘புலி செத்து' என்றால் புலிபோல என்பதே பொருள்.

செத்து>செத்திரம்> சித்திரம் ஆயது

ஒவ்வியம் > ஓவியம் ஆயது; ஒவ்வ உவம உருபு.

செத்து என்பது பழந்தமிழ்ச்சொல்; ஆயினும் உவம உருபுப் பட்டியில் இடம் பெற்றிலது.

சாயல், பார்வை என்பவையும் வழக்கில் காணும் உவமை உருபுகளே. இன்னவாறு மக்கள் வழக்கில் மறைந்து கிடப்பன பலவும் இன்னும் இடம் பெற்றில.

புது நூல்

ஒரு மொழியின் வளர்ச்சி, காலந்தோறும் வழங்கும் சொற்களை யெல்லாம் தொகுத்து அடைவு செய்தலும் பயன்படுத்தலும் இலக்கண விரிவாக்கம் செய்தலும் ஆகும் என்பதைக் குறித்துக் காட்டுகின்றன. இன்னவை, மூவாயிர ஆண்டுக்கு முற்படு தொல்காப்பியத்தில் பின்னை மூவாயிர ஆண்டு மொழிவளர்ச்சி சேர வேண்டின், காலந் தோறும் அப்பணி நிகழவேண்டும் என்பதாம்.

இவ் வுவமை உருபுகளையும் இன்ன இன்ன பொருளில் வரும் என வகுத்துக் காட்டிய பெருமை தொல்காப்பியர்க்கு உண்டு. அம் மரபு படிப்படியே அருகிப் போயிற்று.

இரண்டாக வரும் பொருளுக்கு, உவமையும் இரண்டாக வரும். ட்டைக் கிளவி இரட்டை வழித்தே" (1243) என்கிறார்.

66

“இணை மாலை போலும் மணமக்கள்

"திருக்குறள் ஈரடி என்னிருமக்கள்"

“பொன்காண் கட்டளை போன்ற சுண்ணம் பூசிய மார்பு”

உள்ளுறை

முன்னே அகத்திணையில் சொல்லப்பட்ட உள்ளுறை பற்றியும் அதனோடு சிறப்புடைய இறைச்சி பற்றியும் இவ் வுவமைப் பகுதியில் ஆசிரியர் சில கூறுகிறார்.