உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

(உள்ளுறை: அகத்திணை இயல் 46-48; இறைச்சி: பொருளியல் 35- 37; உள்ளுறை வகை ஐந்து பொருளியல்: 48)

'

உவமை இயலில் உள்ளுறை ‘உவமைப் போலி' எனவும், இறைச்சி ‘உடனுறை’ எனவும் கூறும் வழக்குண்மையைக் குறிப்பிடுகிறார் (உவமை. 24, பொருளியல் 48). இப் பெயர்கள் இவற்றின் பொருள் புரிதற்கு உதவுகின்றன.

உள்ளுறை இறைச்சி என்பவை இன்றும் வழங்குமொழிகளாக உள. ஆனால்,தொல்காப்பியர் வழங்கிய பொருளில் வழங்கப்படவில்லை.

ஒருநூலின் உள்ளே வருவன இவை என முற்படக் குறிப்பதை உள்ளுறை என்றும் உள்ளடக்கம் என்றும் கூறுதல் நாம் அறிந்தது. புலாலை இறைச்சி என்பதும் மக்கள் வழக்கே.

உள்ளுறை இறைச்சிகள் சொல் அளவில் நின்று பொருள் நிலையில் இழப்புற்றது போலவே இவற்றை இந் நாளில் பாவலர்தம் பாடு பொருளில் கொள்ளும் திறம் இல்லாராகிவிட்டனர்.ஏனெனில் இவற்றைத் தெளிவாகப் பொருள் புரிந்து ஓதி, ஓதியதைப் பயன்படுத்தித் தமிழ் வளமாக்கும் நிலை அற்றுப் போகியது.

உள்ளுறையும் இறைச்சியும் பழந்தமிழர் ஆழங்கால் பட்ட ஆய்வு வழியே கண்டெடுத்த வயிரக் கட்டியும் பவழப் பாறையுமாம்.

உள்ளுறை என்பது என்ன?

6.

1. உள்ளுறை உவமை சார்ந்தது.

2. உவமை போலப் பொருள் உவமை உருபு என்ற அமைவு இல்லாதது.

3. உவமைப் போலி எனவும் வழங்கப்படுவது.

4.

வினை பயன் உறுப்பு உருவு பிறப்பு என்னும் ஐவகையில் வரும்.

5. தெய்வம் தவிர்ந்த கருப் பொருள்களை இடமாகக் கொண்டு வரும்.

6. இதன் இலக்கணம்;

"உள்ளுறுத் திதனோடு ஒத்துப் பொருள்முடிகஎன

உள்ளுறுத்து இறுவதை உள்ளுறை உவமம்

என்பது (எடுத்துக்கொண்ட பொருளை உள்ளே செறிய வைத்து அமைக் கப்படும் உவமை என்பது இதன் சுருக்க இலக்கணம்).

அகப் பொருளில் பயிலும் இவ்வுள்ளுறை தலைவி, தோழி,

தலைவன், செவிலி ஆயோர் கூறுதற்கு உரியர்.