உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

173

"குறிப்புப் பொருளே இறைச்சியாகும்; உள்ளுறை உவமைபோல ஒன்றற்கு ஒன்று என்று ஒப்புமைப் படுத்திப் பார்ப்ப தெல்லாம் இங்குக் ாது; இயலாது” என்பார் பெருமுனைவர் தமிழண்ணல்.

கூட

“இறைச்சி தானே உரிப்புறத் ததுவே” என்பது இளம்பூரணர் பாடம். 'இறைச்சிப் பொருள் என்பது உரிப்பொருளின் புறத்ததாகித்

தோன்றும் பொருள்" என்பது அவர் உரை.

"ஓரறிவு உயிர்முதல் ஐயறிவு உயிரி ஈறாகிய கருப்பொருள் இயக்கங்களைப் பின்னணியாகக் கொண்டு மாந்தர்தம் காதல் கற்பு ஆகிய பாலுணர்வு வாழ்வைக் குறிப்பால் உணர்த்துவது இறைச்சி” எனத் தெளியலாம்.

"அம்ம வாழி தோழி, யாவதும்

வல்லா கொல்லோ தாமே; அவண

கல்லுடை நன்னாட்டுப் புள்ளினப் பெருந்தோடு

யாஅம் துணைபுணர்ந்து உறைதும்

யாங்கு பிரிந் துறைதி என்னா தவ்வே”

என்னும் இது, ஐங்குறுநூறு (333).

பறவைகளை நொந்து சொல்லியது என்னும் குறிப்புடை இப்பாட்டு, “பறவைக் கூட்டமாம் யாம், துணை துணையாக வாழுகிறோம். இது கண்டும் நீதுணை பிரிந்து எவ்வாறு வாழ்கிறாய் என்று கேட்கமாட் டாவோ?” என்று தலைவி கூறிய இறைச்சி.

L

இத்தகைய உள்ளுறை இறைச்சி ஆகியவை அகப் பொருளின் அகப் பொருளாக அமைதல் தமிழர்தம் நாகரிகக் கொள்கலங்கள் எனத் தக்கவை.

கதையர்

இந் நாள் கதைப்புனைவர் கருத்தில் கருக்கொள்ளுமா இவ் வக நாகரிகம்! குப்பை வாரிக் கொட்டும் எழுத்தாளர் தம் குடும்பத்து உறுப்பினரும் படிப்பரே என்று துளியளவேனும் எண்ணியேனும் எழுதக் கூடாதா?

இன்னும் இப்படி எழுதினால், உன் மனைவியையும் மகளையும் உன் எழுத்துப்படி செய்வோம் என்று கண்டித்து எழுதினர். அவன் எழுதினான் அவருள் எவர் என்னவர்’ என்பதை என்னாலேயே கண்டு கொள்ள முடியாத போது நீதானா கண்டு கொள்வாய்” என்று மறுமொழி எழுதும் அயல் நாட்டு நிலை இந் நாட்டுக்கு எய்துதலைத் தவிர்க்க வேனும் எழுதுக என்பதே எம் உள்ளுறை, இறைச்சிகளாம்.