உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுள்

செய்

பா

தூக்கு

பனுவல்

தொடை

யாப்பு

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

-

175

விளைநிலம்: செய்தற்கு இடமாகியது; செம்மை செய்யப்பட்டது; புன் செய்; நன் செய்; செயல், செய்கை என்பனவற்றின் மூலமாய சொல்.

பரவுதல், விரிதல் பொருளது. பார், பாரி, பாய், பாய்தல்,பாய்ச்சுதல் இன்னவற்றின் அடிச்சொல்.

தூக்கிப் பார்க்கும் எடை

எடைக்கல், ஆராய்தல்,

உயர்த்துதல்,எடுத்தல் இன்னவற்றின் ஏவல்.

பன் - பருத்தி; பன்னல் - பருத்தி, கூறுதல்; பனுவல் - பாடல்; நூல். “பஞ்சிதன் சொல்லா பனுவல் இழை யாக -நன்.

-

தொடுக்கப்படுவது, இணைப்பது, இசைப்பது; மாலை - தொடையல்; எதுகை மோனை முதலியன தொடுத்தல்; தொடுப்பு, தொடர்பு-நட்பு; தொடுக்கும் தொடர்பு.ஒன்றோடு ஒன்று ஒன்றுவது தொடை. யா கட்டு; யாமரம் கட்டுதற்குரிய பட்டையும் வளாரும் உடை யது; யாக்கை உடல்; யாத்தல் கட்டுதல்; ஆக்கை - கட்டும் நார், வளார்; யாப்பு - பாத்தி,பாத்தி கட்டுதல்; கட்டுதல் அமைந்த பாட்டு செய்யுள் குறித்த சொற்கள் அனைத்தும் மக்கள் வழக்கில் உள்ளதால், அவற்றுக்குள்ள இடம் புலப்படும்.

நாட்டுப் பாட்டு

பழமொழி பன்னீராயிரம் கொண்ட தொகுதி உண்டு. பழமொழி பதின்மூவாயிரம் தொகுத்தார் பாவாணர். பழமொழிகள் பொதுமக்கள் வழக்கில் உள்ளவை. ‘முது மொழி' என்பதும் அது. செய்யுள் வகையுள் அது ஒன்று.

"ஆடிப்பட்டம் தேடி விதை

“சித்திரை மாதப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்'

இவற்றைப் பாருங்கள். ஆடி, தேடி; எதுகைத் தொடை இது. முதல் எழுத்து மாத்திரை ஒத்திருக்க, இரண்டாம் எழுத்து அவ் வெழுத்தாகவோ அதன் இன எழுத்தாகவோ வருவது ‘எதுகை’!

"தைப்பனி தரையைப் பிளக்கும்'

“மாசிப்பனி மச்சைப் பிளக்கும்’

இவற்றில், தை, த என்றும், மா, ம என்றும் முதல் எழுத்து ஒத்திருத்தலால் யாப்பியற்படி இவை 'மோனை' எனப்படும்.