உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

“முதலெழுத்து ஒத்தல் மோனை” “முதல் எழுத்து அளவால் ஒத்து, இரண்டாம் எழுத்து ஒத்தல் எதுகை’

எதுகை மோனையை வெறுக்கும் ஒருவர் கூறினாராம்!

“மோனை பார்ப்பவர் முழுமூடர்;

எதுகை பார்ப்பவர் ஏதுமறியார்’

இவ் விரண்டிலும் மோனை ஒட்டிக் கொண்ட னவே! 'மோனை எதுகை வெறுப்பரும், விலக்க முடியாதவை அவை என்பது, இதன் குறிப்பாம். ஏனெனில், இம் மண்ணில் வளம் இம் மண்ணின் மைந்தரை விடாமல் ஒட்டும் என்பதே’.

இனித் தாலாட்டு என்ன? ஒப்பாரி என்ன? விடுகதை என்ன?

மாமி அடித்தாளோ

மல்லிகைப்பூச் செண்டாலே!

பாட்டி அடித்தாளோ

பால் போட்டும் கையாலே!

- துள்ளி வருகின்றனவே மோனை! இது தாலாட்டு!

கத்தரிக் காய் எங்களுக்குக்

கயிலாசம் உங்களுக்கு

பூசணிக்காய் எங்களுக்கு

பூலோகம் உங்களுக்கு.

து

இவ் வொப்பாரியில் மோனை மட்டுமா; இறுதி இயைபும் அமைந்துளதே.

தமிழனென்று சொல்லடா!

தலைநிமிர்ந்து நில்லடா!

இறுதியில் இவ்வாறு பொருந்திய இசைவருவது 'இயைபு' பின்னே

வரும் பெட்டியும் குட்டியும் இயைபே!

நாலு மூலைப் பெட்டி

நந்த வனத்துப்பெட்டி

ஓடும் குதிரைக் குட்டி

வீசும் புளிய ஆக்கை

-

-

இது விடுகதை; கிணறு கமலை ஏற்றம் இறைக்கும் மாடு, சாட்டைக் கோல் பற்றியது. ஓ, வீ என்பன நெட்டெழுத்து ஒன்றுதல் மோனை (நெடிலொன்று மோனை).