உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

கணவன் பொய் சொல்கிறான்; மனைவி சொல்கிறாள்:

“வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்

கத்தாழ முள்ளு கொத்தோட குத்திச்சாம்

177

இதில், எதுகை மோனை மட்டுமா? மேற்கதுவாய் எதுகை வந்துளது; இரண்டாம் அடியில் இரண்டாம் சீர் ஒன்றுதானே எதுகை பெறவில்லை. இப்படி வருவது, ‘மேற் கதுவாய்’, ‘கதுவாய்' இப்பொழுது எப்படி வழங்குகின்றது. 'கொறுவாய்’, உடைந்து போனது என்னும் பொருளில் வழங்குகின்றது. கதுவாய், இல்லாமல் போனது என்னும் பொருள் தருவது.

இன்னும் பாருங்களேன்:

"பள்ளம் மேடு பார்த்துப்போ”, “அவனுக்கு நல்லது கெட்டது புரியாது”,“எப்படியும் உள்ளதும் இல்லதும் வெளியாகிவிடும்”, “பெரியவர் சிறியவர் அறியாமல் பேசாதே

வ வயெல்லாம்

எதிரிடையாயவை. இவ் விலக்கணம் முரண் தொடை.

முரண்கள்;

ஓ' என்று சொல்வது இல்லையா? நீட்டிச் சொன்னால் ஆஅ,

ஒ என வரும்.

‘பாலோ ஓஒ பால்'

'தயிரோ ஒஒ தயிர்’

இப்படி நீட்டிச் சொல்வது, நாள்தோறும் நாம் கேட்பவை தானே. ஒலி அளவில் மிகுவதால் அளபெடை என்பது பெயர். இசை பாடும் போது, நீட்டி நீட்டிப் பாடுவதைக் கேட்கிறோமே! அவையெல்லாம் அளபெடை. இயலுக்கு ஒருமாத்திரை அளவுதான் கூட்டல் உண்டு. சில இடங்களில் இரண்டு மாத்திரை கூட்டலும் உண்டு. ஆனால், இசைக்கு அளவு அவரவர் தொண்டை தான் போலும்! “காயாத கானகத்தே”- எவ்வளவு நீட்டி இசைக்கக் கேட்டது!

‘எல்லாம் பாட்டு! எங்கும் பாட்டு! எவரும் பாட்டு! என்ற தமிழ்மண், பாட்டுப் பாடி இசைக்கும் பாணன் துணைவிக்குப் ‘பாட்டி' என்று பெயரிட்டது. பாட்டன், பாட்டி என முறைப் பெயரும் கண்டது. ‘பாட்டாங்கால்' எனப் பாடுபட்டுப் பண்படுத்திய தோட்டப் பெயர் கொண்டது. பாட்டியர் திட்டுதல் ஆகாது! ஏனெனில், பழங்காலத்தில் பன்றி, நாய், நரி என்பவற்றுக்கும் பாட்டி என்பது பெயராக இருந்துள்ளது (1165). ‘உள்ளதைச் சொல்லப் பொல்லாப்பு வேண்டாவே' -பாருங்களேன் இப் பழமொழியில் எதுகை கொஞ்சுதல்! இன்னொரு செய்தி; உரை யாசிரியர் காலத்துக்கு முன்னரே பாட்டி பற்றிய இவ் வழக்கு அழிந்து