உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

இக் கற்பனையே, ஈரடியால் உலகளந்த ‘கதை.' வள்ளுவர் காலத்திலேயே இக் கதை கிளர்ந்தமையால் அவர், மெய்ம்மை காட்ட வேண்டி, “மடியில்லாத முயற்சியாளி எவனாக இருந்தாலும் அவன் மண்ணையும் விண்ணையும் எட்டலாம்” என்றார்.

6

பாரடி யெல்லாம் சுற்றிவரப்

படர்ந்த அடிகள் எத்தனை? -குழந்தாய்!

படர்ந்த அடிகள் எத்தனை?

ஈரடி தானே குழந்தாய் - திருக்குறள்,

ஈரடி தானே குழந்தாய்!

என ஈரடியால் உலகளந்த - அளக்கும் விளக்கம் அறியலாம். இவை யெல்லாம் அடியும் தொடையும் ‘பா’வியக்கமாகும் வாழ்வியல் அடிக்

களங்களாம்.

சும்மா

என்ன வேலை செய்கிறாய்?-சும்மா இருக்கிறேன்.

எதற்குப் போகிறாய்?-சும்மா போகிறேன்!

என்ன பேசுகிறீர்?-சும்மா பேசுகிறோம்!

உயர் பொருட் ‘சும்மா’, உற்ற தாழ்நிலை

து.

'சும்மா' என்றால், நோக்க மற்ற - குறிக் கோளற்ற - ஒரு நிலையை வெளிப்படுத்தலாக இந் நாள் விளங்குகின்றது. ஆனால், செய்யுள் ஒன்று கிளம்ப வேண்டும் என்றால், ‘சும்மா’ கிளம்பக் கூடாது.

நோக்கு

நோக்கு ஒன்று கொண்டே செய்யுள் கிளம்ப வேண்டும். "குறிக்கோள் இலாது கெட்டேன்” என்று வாழ்வு அமைதல் ஆகாது; அவ்வாறு, “குறிக்கோள் இலாது கெட்டது” என வாக்கும் அமைதல் ஆகாது.நோக்கு ஓரிடத்து மட்டும் இல்லை எல்லா உறுப்புகளும் பொருந்த நோக்குவதாக அமைவது நோக்கு. நோக்கு மட்டும் செவ்விதாக அமைந்தால் போதுமா? நோக்கை அடையும் வழியும் செவ்விதாக அமைதல் வேண்டும். “பெற்றவள் பசியைத் தீர்த்தல் பிள்ளையின் கடமை என்றாலும், அப் பசியை எப்படியும் தீர்க்கலாம் எனின், அப் பெற்றவளே ஒப்பாள்” என்பது, தமிழ் மண்ணின் கொள்கை. ஆதலால், “நோக்குடன், நோக்கை அடையும் வழியும் சரியாக இருக்க வேண்டும்" என்பதை ஆசிரியர் தொல்காப்பியர் ‘மரபு' என்றார்.

மரபு

ஓரிடத்தை அடைதல் நோக்குடன் புறப்பட்டார், போகும் வழி, போகும் முறை என்பவற்றைக் கட்டாயம் கருதவேண்டும் என்பதால், வழி