உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

181

நடைக்குச் ‘சாலை விதி’கள் சட்டமாக்கப் பட் மை உலகளாவிய முறை. பாட்டைக்குக் கண்டதைப் பாட்டுக்கும் கண்டது நம் பண்டையர் முறை. அதுவே, ‘மாற்றருஞ் சிறப்பின் மரபு' என்பது. அதனைத் தெள்ளிதில் உணரச் செய்வதே தொல்காப்பிய மரபியல்.

மரபு பேணி அமைத்தல், நோக்குடையதாதல் என்ற அளவில் பா அமையின் ‘பாடுவோன்’ அறிவு நிலை சார்ந்தோ உணர்வு நிலை சார்ந்தோ மட்டும் அமைந்து விடும்!

தூக்கு

பாடுவோன், தானே துய்க்கவோ பாடல் இயற்றினான்? இல்லையே! அவன், படிப்பானைக் கருத்தில் கொள்ளாமல் பாடினால், அப் பாட்டு அவனைத் தொடாமலே போகிவிடுமே! ஆதலால், படிப்பான் எண்ணத் தைத் தான் நுண்ணிதின் உணர்ந்தவனாய் அல்லது பயில்வான் எவ்வெவ் வகையால் எல்லாம் ஆய்வான் - தடைவிடை கிளத்துவான் – என்பவற்றை யெல்லாம் எண்ணி அப் படிப்பாளியாகத் தான் இருந்து கொண்டு பாவைப் படைக்க வேண்டும். அதற்குத் தான் ‘தூக்கு' என்பது பெயர். தூக்குக்கு ஒத்துவராதது ‘தூக்கு' என்னும் பெயர் கொள்ளத் தகுவது ஆகாதே (தூக்கு = UITL_6).

தொடை

சொல்லும் பொருள் தெளிவு திட்பம் மரபு இன்னவற்றை உடையது எனினும், சுவையுடையதாகச் சொல்லப்பட்டால்தான், கேட்பார் விரும்ப அமையும். ஆதலால், பாவலன் கேட்பான் செவியைத் தன் செவியாகக் கொள்ளலும் கட ப்பாடாம். கேட்கும் சுவை “செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" எனப் பாராட்டப்படும். "அச் செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை” எனவும் போற்றப்படும். தன் வயப்படுத்திக் கொள்ளாமல் ஒருவனுக்குச் சொல்லப்படும் செய்தி உட்புக வாய்ப்பே இல்லாமல், வாளா போகிவிடும். இன்னது கொண்டேபாவின் நயத்திற்குத் ‘தொடை’ என்னும் ஒன்றையும் கண்டனர். அத் தொடைகளே மோனை, எதுகை, முரண், அளபெடை, செந்தொடை என்பனவாம்.

அளவு

யைபு,

எத்தகு சுவையது எனினும் - பொருள் பொதிவு உடையது எனினும் -அளவோடு அமைதலும் வேண்டும் என்பதும் தொல்காப்பியர் தெளிவு. ஆதலால், ‘அளவியல்' என்றோர் உறுப்பையும் கொண்டார். இவற்றை முறையே தொல்காப்பியர் மரபு, தூக்கு, தொடை, நோக்கு, பா, அளவியல் என வரிசைப்படுத்துகிறார்.