உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

கட்ட க் கட்டுமானப் பொருள்களாக நாம் முன்னர்க் கண்ட உறுப்புகளையும் கொண்டு, கட்டப்பட்ட

ஆறும் எனலாம்.

ஆறு கட்டுமான உறுப்புகள் இந்த

யாப்பு மாளிகைக்குக் கட்டுமானப் பொருள், கட்டுமானப் பணி என்பவை மட்டுந்தாமா உண்டு?

தள மென்ன, பூச்சு என்ன, வண்ணமென்ன, வனப்பு என்ன, ஏந்து என்ன, இயைவு என்ன - எல்லாமும் கருதப்பட வேண்டுமே! எல்லாமும் கூடும் போதுதானே ‘ஏராரு மாளிகை'யாய் ஏற்றம் பெறும்!

இவற்றைக் கருத்தில் கொண்டே, பிற உறுப்புகளை வகுத்தும் தொகுத்தும் கூறுகிறார் ஆசிரியர்.

அகப்பொருள்

திணை எனப்பட்ட அகப் பொருள் (அகத்திணை) புறப் பொருள் (புறத்திணை) என்னும் இரண்டும், பாடுபொருளாக இருக்க வேண்டும். களவு கற்பு என்னும் கைகோள் (ஒழுக்க நெறி) இடம் பெற வேண்டும். அவற்றைக் கூற்று வகையால் கூற வேண்டும். கூறினால் அதனைக் கேட்போர், கேட்கப்படும் இடம், கேட்கும் காலம் என்பனவும் பொதுள வேண்டும்.

L

கேட்டல் பயன். கேட்டலால் உண்டாகும் மெய்ப்பாடு, இன்னும் சேர்க்கத் தக்கனவாம் பிற (எச்சம்) என்பவும் இணைய வேண்டும். கூறுவார் இவர், கேட்பார் இவர் என்னும் குறிப்பும் (முன்னம்), கேட்பார்க்குப் பயனுண் ாகப் புலவனால் படைக்கப்படும் புதுமைப் பொருள், கூறப்படும் பொருளின் துறை, ஒன்றனோடு ஒன்று பொருந்தி நிற்கும் வகை (மாட்டு), ஓசை இன்பமாம் வண்ணம் என்பனவும் ஒன்ற வேண்டும்.

இவையெல்லாம் எண்ணின், உறுப்புகள் இருபத்து ஆறாம், செய்யுள் ‘வனப்பு’ எனப்படுவன எட்டு. அவை: அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பன (அவற்றின் விளக்கம் மேலேவரும்).

பாடுவது எளிது

"இவ்வளவும் பார்த்துப் பாடுவதுதான் பாவா? அப்பாடா! நடக்கும் செயலா? பாடல் இயற்றுவது எளிமை இல்லை” என்கிறீர் களா? இல்லை! இல்லவே இல்லை! “முடியாது என்னும் எண்ணத் தடை ஒன்றே தடை! பாடல் இயற்றுவது தடையில்லை! யாப்புத் தடையும் இல்லை! யார் தடையும் இல்லை! இதனை முதற்கண் தெளிவித்து விட வேண்டும்” என்பதற்காகவே, பழமொழி, தாலாட்டு, விடுகதை முதலிய வற்றில் எல்லாம் ‘யாப்பியல்' இயல்பாக அமைந்திருப்பதைச் சுட்டிக் காட்டப்பட்டது. இதற்காகவே எம்மால் எழுதப்பட்ட நூல் ஒன்று ‘எளிதாகப் பாடலாம்' என்னும் யாப்பியல் நூல்.