உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிக எளிது

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

183

மூச்சுவிடுமுன்னே முன்னூறு பாடுவாராம்! நானூறும் பாடுவாராம்! ‘ஆச்சு' என்று தும்மல் அடிக்குமுன்னே, ஆயிரம் பாடிவிடுவாராம்! ஒரு புலவர் கூறியது இது. இன்னொரு புலவர் கூறுகிறார்:

“ஏடாயிரம் கோடி எழுதாது தன்மனத்து

எழுதிப் படித்த விரகன் இமசேது பரியந்தம்

எதிரிலாக் கற்ற கவிவீர ராகவன்'

என்று தம்மைக் குறிப்பிடுகிறார். இன்னொரு வேந்தன் - பின்னாளை வேந்தன்,

“கன்னல் பாகில் கோல்தேனில்

கனியில் கனிந்த கவிபாட

என்கிறான்.

"தென்னுண் தேனின் செஞ்சொற் கவியின்பம்

என்கிறான் ஒரு பெரும்புலவன்.

“சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய

வந்த இருவினைக்கு மாமருந்து - முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் மன்னிய இன்குறள்வெண் பா

என்பது வள்ளுவ மாலையுள் ஒன்று.

வண்ணம் பாடல் அரிதுதான் - ஆனால்! அருணகிரியார்க்கு? ஒலியல் அந்தாதி பாடலும் அரிதே - ஆனால்! வண்ணச்சரபம் தண்ட பாணி அடிகளுக்கு?

ஏகபாதம் என்னும் ‘ஓரடி’ பாடல், அருமையே - ஆனால்! சோழ வந்தான் அரசஞ்சண்முகனார்க்கு?

மூவர்!

பண் சுமந்த பாடல் எவ்வளவு எளிமையாகப் பாடியுளர் தேவார

பாரதியாரும் பாவேந்தரும், பாவாலே நிலைத்து விடவில்லையா? செந்தமிழும் நாப்பழக்கம்!

பாடிப்பாடித் தழும்பேறினால் அரியதும் எளியதாம்!

வளையக் காட்சியைப் (சர்க்கசைப்) பார்த்தால் அருமையெல்லாம், எவ்வளவு எளிமை!

ஆர்வம் வருக! அதிலே ஊன்றுக! அதன் வடிவே ஆகுக! ஆக்குவ வெல்லாம் ஆக்கமிக்க பாடலேயாம்!