உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

அசையும் இசையும்

அசையும் சீரும் அடுக்குவதா பாட்டு? இல்லை!

"அசையும் சீரும் இசையொடு சேர்த்தி”

இனிக்கப்பாடுக என்கிறார் (1268) ஆசிரியர்.

அசைவகை, சீர்வகை, அடிவகை, தளைவகை, பாடலாகும் வகை என்பவற்றை எல்லாம் விரிவாகக் கூறுகிறார்.

புதுப்பா

இந்நாளில் புதுக்கவிதை எனப்படுகிறது; உரைவீச்சு எனப்படுகிறது. 'ஐக்கூ' எனப்படுகிறது. 'வசனகவிதை' எனவும் தோன்றியது. இளங்கோ வடிகள் உரைப்பாட்டு மடை இயற்றினார். உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் எனவும் சிலப்பதிகாரம் வழங்கலாயிற்று. பாட்டும் உரையுமாக நடந்த பெருந்தேவனார் பாரதமும் கிளர்ந்தது. இவற்றை யெல்லாம் தொல்காப்பியம் கொள்ளுமா? தள்ளுமா?

தொல்காப்பிய அளவுகோல், கொள்ளுவது, தமிழ்வழக்கு; தள்ளுவது அயல்வழக்கு;

தொல்காப்பியம் கொள்ளுவது மொழிக்காவல்-பண்பாட்டுக்காவல். தொல்காப்பியம் தள்ளுவது மொழிக்கேடு, பண்பாட்டுக்கேடு. தொல்காப்பியம் கொள்ளுவது மொழித் தூய்மை.

தொல்காப்பியம் தள்ளுவது மொழிக் கலப்பு.

ஒரோ ஒருகால் ஒருவேற்றுச் சொல்லை ஏற்பினும், அது தமிழியல்பு கொண்டு அமைக்கப்பட்டதாக இருக்கவேண்டும். அதற்கு மாறாக அமைத்தல் ஆகாது.வேற்றுச் சொல்லை மாற்றித் தமிழியல்பில் வழங்கினும் கட்டாயம் வேற்று எழுத்து வடிவத்தை எந்த வகை கொண்டும் புக விடுதல் ஆகாது என்பனவேயாம்.

இவை மீண்டும் இங்கு வலியுறுத்தித் தொகுத்துக் கூறியது, பழமரபு காக்கும் இலக்கண நூல் மறைநூல் – தொல்காப்பியம் என்பதை உறுதிப்படுத்தவேயாம்.

-

எத்தகைய பெருமையர் - அருமையர் - பதவியர் - ஆட்சியர் - எனினும், அவர் தொல்காப்பிய நோக்கைப் பாதுகாத்துப் போற்ற உரிமையரே அன்றி, அழிக்க உரிமைப்பட்டவர் அல்லர் என்பதே, அவரை (தொல்காப்பியரை) அடுத்து வந்த நூலாசிரியர் ஒருவர் கட்ட ளை அது, தொல்காப்பியன் தன் ஆணை என்பது. அது வருமாறு: