உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

187

கனிமுன் நிரையும், கனிமுன் நேரும் வருதல். முன்னது ஒன்றிய வஞ்சி; பின்னது ஒன்றா வஞ்சி.

எ-டு : -6:

"முரசியம்பின முருடதிர்ந்தன

முறையெழுந்தன பணிலவெண்குடை

அரசெழுந்ததோர் படியெழுந்தது”

என்பது சிலப்பதிகார மங்கல வாழ்த்து. இவை முழுவதும் ஒன்றிய வஞ்சி. மருட்பா

இந்நாற்பாவுடன் மருட்பா என ஒன்று உண்டு. அதனை 'அம்மையப்பன்' போலவும் 'நரமடங்கல்' (நரசிம்மம்) போலவும் என்பார் யாப்பருங்கல விருத்தியார். யானைக் கையும், அரிமா உடலும் கொண்ட ‘யாளி’ என்னும் உருவம் கோயிற் சிலைகளில் உண்டே அது போல் என்பது. மருளாவது மயக்கம். இதுவும் அதுவும் கலந்த ஒன்று. வெண்பா முன்னாக அகவல் பின்னாக அமையும் யாப்பு அது (1342).

செந்தொடை

தொடை பற்றி முன்னரே கண்டோம்

தொடை எதுவும் வாராமல் தொடுப்பதும் தொடையே! அது பொருளே போற்றிவரும் 'செந்தொடை' என்பது (1357). செம்மையாவது இயல்பு.

இருபா

அகவல் வெண்பா கலிப்பா வஞ்சிப்பா எனப் பாவகை நான்கெனக் கூறினும், அகவலுள் வஞ்சியும், வெண்பாவுள் கலியும் அடங்குதலின் ஆசிரியப்பா, வெண்பா என்னும் இரண்டு பாவினுள் அடங்கும் என்பார். (வஞ்சி நெடும் பாட்டு என்னும் பட்டினப்பாலையும், வெண்கலிப்பா, கலிவெண்பா என்னும் யாப்பும் இவண் நோக்கத் தக்கவை) வாழ்த்து

'ஐங்குறு நூல்' வாழ்த்துதலையே முதலடியாகக் கொண்ட முதற் பத்து உடையது.“வாழியாதன் வாழி யவினி” என்பதே அம் முதலடிபத்தும். சிலப்பதிகாரக் காப்பியம், ஒருவரைக் காணும் காலும், அவரிடம் விடை பெறும் காலும் வாழ்த்துடன் வந்து வாழ்த்துடன் விடை பெறு தலைக் று காட்டும். கடவுள் வாழ்த்திலேயே, திருவள்ளுவர் நீடு வாழ்தலைச் சுட்டினார் இருமுறை. இன்பத்துப் பாலில் நீடு வாழ்க என்பாக்குத் தும்முதலைச் சுட்டினார்.

வாழ்த்துதல் என்னும் பண்பு நம்மவர் உயர்பண்பு. இதன் மூல வைப் பகம் தொல்காப்பியம். அது,