உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

“முரசியம்பின முருடதிர்ந்தன

முறையெழுந்தன பணிலவெண்குடை

193

(சிலம்பு)

ஏந்தல் வண்ணம்: சொல்லிய சொல்லினாலே சொல்லப்பட்டது சிறக்க வருவது ஏந்தல் வண்ணம்.

"பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்ல தில்லை பொருள்

(குறள். 751)

உருட்டு வண்ணம்: உருளை ஓடும் ஓட்டம் போலச் சொல் ஓட வருவது உருட்டு வண்ணம். உருளற்கு ஏற்ப நெடிலும் வல்லொற்றும் பெரிதும் வாராது தொடுத்தல் வேண்டும்.

எ-டு:

"எரியுரு வுறழ விலவ மலர"

(கலி.33)

முடுகு வண்ணம்: உருட்டு வண்ணம் போன்று, நாற்சீரடியின் மிக்க அடியில் வருவது முடுகுவண்ணம்.

எ-டு:

"நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ

(கலித். 39)

வண்ணங்கள் இவை என எண்ணி அவற்றை நிரற்பட உரைத்து நிறைவில், “வண்ணந் தாமே இவையென மொழிப” என முடித்தார் (1490).

வண்ண இயற்கை: வண்ணங்கள் இருபதும் குறுங்கணக்கு, நெடுங் கணக்கு என்னும் 'அரிவரி' வரிசையிலேயே இயல்பாக அமைத்துக் கொண்ட அருமை வியக்கத்தக்கதாம்.

பெயர்களைப் பாருங்களேன்: பா அ வண்ணம், நூற்பா வண்ணம், தாஅ வண்ணம் இடையிடல்தானே தாவுதல்; வல்லிசை, மெல்லிசை, இயைபு ஆகிய மூன்றும், வல்லினம், மெல்லினம், இடையினம் வருதல் தானே. இனி, அளபெடை வண்ணம் சீரிய ஓசை நீட்டம் கருதியது அல்லவோ! நெடுஞ்சீர் குறுஞ்சீர், சித்திரம் நலிபு என்பவை முறையே நெடில், குறில், நெடிலும் குறிலும், ஆய்தம் என்பவை மிகுந்தவைதாமே. அகப்பாட்டு புறப்பாட்டு வண்ணங்கள் முடிநிலை பற்றியவை. ஒழுகு வண்ணம் ஆற்றுநீர் ஓட்டம் போல்வது; ஒரூஉ, வண்ணமில்லா வனப் பினது; எண்ணுவண்ணம் எண்ணிக்கை சுட்டிவருவது. தூங்கல், ஏந்தல், உருட்டு, முடுகு என்பவை முறையே அசைந்துவருதல், பல்கால் வருதல், உருண்டுவருதல் ஆகிய நடைகுறித்தவை. இவையெல்லாம் செயற்கை யில்லா இயற்கை யமைந்தவை.

இனி, இவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் எங்கிருந்து காட்டப்பட்டன என்பதைப் பாருங்கள். 14 வண்ணங்களுக்குத் தொல்காப்பியத்தில் இருந்தே எடுத்துக்காட்டுகள் காட்டப்பட்டுள. ஏந்தல் வண்ணத்திற்கு