உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

அகப்பாட்டு வண்ணம்: இறுதியடி இடையே வரும் அடிபோல் நிற்பது.அதாவது முடியாத் தன்மையான் முடிந்ததாய் அமையும்.

எ-டு:

“மரபுநிலை திரியா மாட்சிய வாகி

உரைபடு நூல்தாம் இருவகை இயல்

முதலும் வழியுமென நுதலிய நெறியின்”

(நுதலிய நெறியின இருவகை இயல எனமுடிக்க)

(1593)

புறப்பாட்டு வண்ணம்: முடிந்தது போல் தோன்றி முடியாததாய் வருவது புறப்பாட்டு வண்ணம்.

“இன்னா வைகல் வாரா முன்னே

செய்நீ முன்னிய வினையே

முந்நீர் வைப்பகம் முழுதுடன் துறந்தே

-ஈற்றயலடி முடிந்தது போன்று முடியாத தாயிற்று (பேரா).

ஒழுகு வண்ணம்: ஒழுகிய இனிய ஓசையால் வருவது ஒழுகு

வண்ணம்.

“உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும் உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொல்முன் உயிர்வரு வழியும்

மெய்யிறு சொல்முன் மெய்வரு வழியும் "..

(106)

ஒரூஉ வண்ணம்: கூறப்பட்ட வண்ண வகையுள் எதனையும் சாராது வண்ணம் நீங்கிச் செந்தொடையாக வருவது.

“சிறப்பொடு வருவழி யியற்கை யாகும்'

(349)

எண்ணுவண்ணம்: ஒன்று இரண்டு என்பன முதலாக எண்ணுவகை

பொருந்தி வருவது எண்ணுவண்ணம்.

எ-டு : டு:

“நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும் ”

(1589)

அகைப்பு வண்ணம்: அறுத்து அறுத்து வருவது அகைப்பு

வண்ணம்.

அகைத்தல் = அறுத்தல்.

66

"ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே....

(1526)

தூங்கல்வண்ணம்: வஞ்சியுரிச் சீராகிய கனிச்சீர் மிகுந்து வருவது

தூங்கல் வண்ணம். தூங்கல் = அசைநடையது.