உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எ-டு:

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

“உரிச் சொற் கிளவி விரிக்கும் காலை

191

(782)

வல்லிசை வண்ணம்: வல்லெழுத்துப் பலவாக அமைந்தால் அது வல்லிசைவண்ணம்.

எ-டு:

"மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை

(1025)

மெல்லிசை வண்ணம்: மெல்லெழுத்துப் பலவாக அமைதல்

மெல்லிசை வண்ணம்.

எ-டு: :

"வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்

(420)

இயைபு வண்ணம்: இடை யெழுத்துப் பலவாக வருதல் இயைபு

வண்ணம்.

6T-(b): டு:

"தலைவரு விழும நிலையெடுத் துரைப்பினும்"

(985)

அளபெடை வண்ணம்: உயிரள பெடை, ஒற்றளபெடை என்னும் அளபெடை இரண்டும் மிகுந்து வருவது அளபெடை வண்ணம்.

எ-டு:

66

"ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தோன்றும்

"கண்ண் டண்ண் எனக் கண்டும் கேட்டும்”

1483)

நெடுஞ்சீர் வண்ணம்: நெட்டெழுத்து மிகுந்து வருவது நெடுஞ்சீர்

வண்ணம்.

எ-டு :

"கேடும் பீடும் கூறலும் தோழி”

(1048)

குறுஞ்சீர் வண்ணம்: குற்றெழுத்து மிகுந்து வருவது குறுஞ்சீர்

வண்ணம்.

எ-டு:

"புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇ

(1053)

சித்திரவண்ணம்: நெடிலும் குறிலும் ஒப்ப வருவது சித்திரவண்ணம்.

எ-டு:

“காமம் நீத்த பாலி னானும்

(1022)

நலிவு வண்ணம்: ஆய்த எழுத்து மிகுந்து வரின் அது நலிபு வண்ணம். எ-டு:

"னஃகான் றஃகான் நான்கன் உருபிற்கு

(123)