உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

ை இளங்குமரனார் தமிழ்வளம் - 19

தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம், அம்போதரங்கம், கொச்சகம் என்ன அமையும் கலியும், அதன் இளையோன் போன்ற வஞ்சியும் வாழ்த்துக்கு வேண்டா என்று ஒதுக்கிய வகை இதுவாம் (1367,1417).

சிலர் மேடையில் வாழ்த்தும் வாழ்த்துதல் அவையோர்க்கு மட்டுமன்றி, வாழ்த்துப் பெறுவோரையும் நெளிய வைத்தல் கண்கூடு.

அம்மட்டோ! அம் மேடை விட்டு இறங்கியதும் எவ்வளவு வாழ்த்திப் பேசினாரோ அதனினும் மிகப் பழிப்பதும் கேட்க, ‘சீ! சீ! என்ன பிறவி இது' என்று பழி கொள்வாராக்கும், இவ் வாழ்த்து வேண்டுவது தானா? இதற்கு மாறானவரும் உண்டு. மனையில் புகழ்வார்; மன்றில் பழிப்பார் அவர். ஆதலால்,

“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு"

"எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு”

என்றார் வள்ளுவர் (819, 820).

வண்ணம்

வளமான இசையமைந்த பா, வண்ணப்பா, வள் ழூ வண். வண் + அம்= வண்ணம்.

வண்ணம் எழுத்தின் தோற்றத்திலேயே தோன்றியது. மெய்யியல் தோற்றம் எப்படி எழுத்தொடு கொண்டதோ, அப்படிக் கொண்டது வண்ணமும்.

ஓசை நயம் கொண்டு வண்ணங்களை இருபது எனக் குறித்தார் தொல்காப்பியர். அதனை நூறாக்கினர் பின்னவர்; பன்னூறாகப் பாடிய வரும் உளர்.

பாஅ வண்ணம்: அசையா சீரா தளையா பார்க்க வேண்டா வண்ணம் பாஅ வண்ணம். அவ் வண்ணம் இலக்கணம் கூறும் நூலுள் பயில (நிரம்ப) வரும். அதற்குச் சொல்லே சீராய் அமையும். நூற்பா வண்ணம் என்பதும் இதற்கு ஒரு பெயர்.

“அவற்றுள்,

பாஅ வண்ணம்

சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும்

என்னும் இந் நூற்பாவே, பாஅ வண்ணச் சான்று (1470)

தாஅ வண்ணம்: இடையிட்டு வரும் எதுகை யுடையது தாஅ

வண்ணம்.