உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

195

இதற்குத் ‘தகடூர் யாத்திரை'யைக் கூறுவர். சில பாடல்களை யன்றி நூல் எய்திற்றில்லை. எய்திய பாடல்கள் எம்மால் உரைகண்டு நூலாக்கம் பெற்றுளது.பெருந்தேவனார் பாரதம் உரையிடை இட்டது.

தோல் :

‘இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் பரந்தமொழியான் அடிநிமிர்ந்து ஒழுகினும் தோலென மொழிப தொன்மொழிப் புலவர்’

என்னும் இந் நூற்பாவின் முதல் இலக்கணத்திற்கு இம் முதல் அடியே எடுத்துக்காட்டு. பரந்த மொழியான் அடிநிமிர்ந்து ஒழுகுவதற்குச் சான்று பத்துப்பாட்டு.

விருந்து : விருந்து என்பது புதிதாகப் பாடும் நூல் வகையைக் குறிக்கும். புதுயாப்பினது என்பதுமாம். முத்தொள்ளாயிரம், அந்தாதி, கலம்பகம் என்பவற்றை எடுத்துக்காட்டுவார் பேராசிரியர்.

6

இயைபு: 'ஞ்' என்னும் எழுத்து முதல் 'ன்' என்னும் எழுத்து ஈறாக வரும் புள்ளி எழுத்துக்களைக் கொண்டு முடியும் பாடல்களையுடைய நூல் இயைபு இலக்கணம் உடையதாம்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, பெருங்கதை என்பன இவ்வகையின. ‘என்’ என முடிந்தவை.

புலன் : எளிய வழக்குச் சொற்களைக் கொண்டு ஓடிய ஓட்டத்தில் பொருள் புரியுமாறு பாடப்படுவது புலன் என்னும் வனப்பாகும். எ- டு : குடும்ப விளக்கு; இருண்டவீடு; பாஞ்சாலி சபதம்.

இழைபு: வல்லொற்று வாராது குறளடி முதலாக ஏறிய அடிகள் பலவும் வரத்தொடுப்பது இழைபு வனப்பு எனப்படும். இதுவும் புலன் போன்ற பொருள் புலப்பாடு உடையதாதல் வேண்டும்.

எ-டு : கலியும், பரிபாடலும் என்பார் பேராசிரியர்.

வனப்பு அமைக.

இனிப் 'பா' பற்றிச் சில காணலாம்.

பா, உரைப்பா

=

பா = பாட்டு. இப் பாட்டினைத் தொல்காப்பியத்தை உள்வாங்கி, ஏட்டுப்பாட்டு எனவும் நாட்டுப்பாட்டு எனவும் இரு வகையாகக்

காணலாம்.

ஏட்டுப்பாட்டு என்பது அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா, பரிபா, அங்கதப்பா, தேவபாணி என்பனவாம்.