உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

நாட்டுப்பாட்டு என்பது, உரைப்பாட்டு, பிசிப்பாட்டு, முதுமொழிப் பாட்டு, மந்திரப்பாட்டு, குறிப்புப்பாட்டு, பண்ணத்தி என்பவை.

அகவல் : அகவல் முதலாகிய பாக்கள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளும் கூறுவனவாக வரும். அவற்றுக்குச் சீர் வரை யறை அடிவரையறை முடிநிலை வரையறை என்பவையும் உண்டு. ஆசிரியப்பா நால்வகைப்படும். அவை நேரிசை, நிலைமண்டிலம், அடிமறிமண்டலம், ணைக்குறள் என்பன.

6

இறுதியடிக்கு முன்னடி முச்சீராய் வருவது நேரிசை. எல்லா அடிகளும் நாற் சீராய் வருவது, நிலைமண்டிலம். எந்த அடியை எந்த அடியாக மாற்றினாலும் ஓசையும் பொருளும் மாறாதது, அடிமறி மண்டிலம்.

முதலடியும், இறுதியடியும் நாற்சீரடியாய் இருக்க இடையடிகள் சில இருசீர் முச்சீர் அடிகளாகவும் வருதல், இணைக்குறள். ஆசிரியப்பா இது சங்கநாளில் பெருஞ் செல்வாக்குடையதாக விளங்கியது. மேற்கணக்கு எனப்படும் பாட்டு, தொகையாகிய பதினெட்டு நூல்களில் கலித்தொகை, பரிபாடல் என்னும் இரண்டும் தவிர்ந்த பதினாறு நூல்களும் அகவலால் அமைந்தவையே. இந் நாள்வரை அதன் செல்வாக்குப் பெருகியே உள்ளது.

மூன்றடிச் சிறுமை ஆயிரம் அடிப்பெருமை எனப்பட்ட அப் பா ஆயிரம் அடியைத் தாண்டியும் வள்ளலாரால் பாடப்பட்டது.

வெண்பா : வெண்பா ஈரடிச் சிறுமையும் பாடுவோர் எண்ணத் திற்குத் தகுந்த பெருமையும் உடையது. கலித்தொகையில் கலிவெண்பாவும் உண்டு. குறள்வெண்பா, குறுவெண்பாட்டு எனப்படும். அதனின் நீண்ட வெண்பா நெடுவெண்பாட்டு எனப்படும். குறுவெண்பாவுக்குக் குறள் நூலும், மற்றை வெண்பாவுக்குப் புறப்பொருள் வெண்பாமாலையும் நமக்குக் கிடைத்த தனி நூல்கள். பாரத வெண்பா பெருந்தேவனார் பெயரால் விளங்குகிறது. உரையிடையிட் வெண்பாவுடையது. 830 பாடல்கள் அளவில் முன்னும் பின்னும் இல்லாமல் கிடைத்து வெளிப்பட்டுளது. அது பிற்காலத்தே உரையிடையிட்ட தோற்றமுடையது ஆயிற்றுப் போலும்!

வெண்பா, குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா,அளவியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வண்பா, பஃறொடை வெண்பா, கலிவெண்பா எனப் பல வகைகளை யுடையது. வெண்பாப் பாடுதலில் பின்னாளில் பெரும் புகழோடு விளங்கியவர் புகழேந்தியார். அவர் கொண்டவை நேரிசை வெண்பா. நான்கடியான் வருவது அது. மூவடியால்