உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

வழுத்துப் பாடல். அது பாடல் அளவால் பெருந்தேவபாணி, சிறு தேவபாணி என இருவகைப்படும் (1395) கலி வகையைச் சேர்ந்தது.

பாடுபுகழ் : சங்க நாளில் “இன்னது பாட இவர்” என்னும் புகழ் பெற்றார் இருந்தனர். குறிஞ்சிக்குக் கபிலன்; முல்லைக்கு நப்பூதன்; மருதம் மருதனிலநாகன்; நெய்தல் நல்லந்துவன்; பாலை பெருங்கடுங்கோ. இவர் இத் திணைகளைப் பாடுதலில் வல்லார். பரணன் வரலாறு பாடுதலில் வல்லான். பின்னாளிலும் து பாட இவர் வல்லார்' எனப் புகழ் மரபு ஒன்றும் கிளர்ந்தது.

இனி, அடி வரையறை

ல்லாத உரை முதலியவற்றை எண்ணு வோம். இவை பொதுமக்கள் புலமக்களாய்த் தமிழுக்கு வழங்கிய கொடையாகும்.

உரைப்பா : உரைப்பா நான்கு வகை என்பதை,

"பாட்டிடை வைத்த குறிப்பி னானும்

பா இன்று எழுந்த கிளவி யானும்

பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும்

பொருளொடு புணர்ந்த நகைமொழியானும்

உரைவகை நடையே நான்கென மொழிப

என்பார் ஆசிரியர் (1429).

இதில் வரும் உரைவகை நடை என்பதே 'உரைநடை' என்னும்

வழக்குக்கு மூலமாகும்.

பாட்டின் இடையே வைக்கப்பட்ட பொருட்குறிப்பு உரை,

பாடல் இல்லாமலே சொல்லப்பட்ட

உரை,

பொருளொடு பொருந்தாத பொய் (புனைவு) உரை,

பொருளொடு பொருந்திய நகைச்சுவை உரை

என நால்வகை உரைநடைகளும் பண்டுதொட்டே வழங்குதலைக் குறிக்கிறார் ஆசிரியர். ஆதலால், பண்டை

உரைநடை வழக்குக்குன்றி

மீட்டெடுப்புச் செய்யப்பட்டது பின்னே என்பதை உணரலாம்.

மெய்ப்பாடுகளுள் முதற்கண் வைக்கப்பட்டது ‘நகைச்’சுவை. அச் சுவை மிக ஆக்கப்பட்ட உரைநடை நூல்கள், அந் நாளே இருந்தன என்பதையும் இந் நூற்பாவால் உணரலாம்.

பிசி:பிசி என்பது 'புதிர்' என இந்நாளில் வழங்குகின்றது. 'விடுகதை’ எனவும் படுகிறது.

ஒப்பமைந்த உவமை, ஒன்று சொல்ல ஒன்று தோன்றுவதாம் குறிப்பு என இருவகையாகப் பிசிவரும்.